ஹிந்துஸ்தானத்தில் ஹலால் வலை

‘‘என்ன தான் சார் இந்த ஹலால் பிரச்சினை?”

‘‘பெருசா ஒண்ணுமில்லீங்க.  இனிமேல் நான் சொல்ற மாதிரி தான் சாம்பாருக்கு காய் நறுக்கணும் – முருங்கைக் காயை வட்டம் வட்ட
மாகவும்  பொடிப் பொடியாகவும், முள்ளங்கியை நீளம் நீளமாகவும் தான் நறுக்கணும்; நூல்கோலை நறுக்காமல் முழுதாக சாம்பாரில் போடணும். நீங்க மட்டுமில்ல, இந்தத் தெருவே அட! இந்த ஊரே இப்படித் தான் சமையல் செய்யணும்!”

‘‘இதென்னங்க அநியாயமா இருக்கு? நான் எப்படி சாப்பிடணும்னு தீர்மானிக்க நீங்க யாரு?’’

‘‘இது தான் ……  இதே தான் ஹலால் பிரச்சினையும். ஆனால் நமக்குக் கோபம் வருவதில்லையே ஏன்?”

ஏன்? அறியாமை தான், நண்பர்களே.

நம்மில் பலரும்  ‘‘ஹலால் சர்ட்டிஃபைடு’’ என்பதை ஏதோ ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் போன்றது என எண்ணிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் “ஹலால் ” என்ற பதத்துக்கு  ‘இஸ்லாமிய மத சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட’ என்று தான் பொருள். அவர்களது மதச் சட்டம் அவர்களுக்குப் பொருந்தும், நமக்கு? யோசித்துப் பார்த்தால் தான்   ஒரு சில பழக்கங்கள் நாமறியாமல் நம் மீது திணிக்கப்படுவது புரியும். ஹலால் என்பது வெறும் அசைவ உணவு சார்ந்த விஷயமாக விட்டுத்தள்ள முடியாது. தாங்கள் இறைச்சி தயாரிக்கும் முறை தான் உயர்ந்தது என்றும், பிற மதத்தவரின் வழிமுறை தவறு போலவும் நம்மை நம்ப வைத்திருக்கும் ஒரு விதமான மதத் தீண்டாமை.

ஹலால் பிரபலமாவதற்கு முன் ஜட்கா முறையில் தான் மிருகங்கள் வெட்டப்பட்டன. அது நம் ஊர் மரியாதை. ஆனால் இப்போது ஹலால் நம் மீது திணிக்கப்படுகிறது. இந்த வழக்கத்தை நாம் எதிர்க்காமலிருப்பது வேற்று கலாச்சார அடிமைத்தனம். ஆம்! நமது தர்மத்தை, பண்பாட்டை ஒதுக்குகிறோமே. (உச்சநீதிமன்றத்தில் ஆண்டு 2020 ல் இந்த ஹலாலுக்கு தடை கோரும் வழக்கு வந்தது. அது தள்ளுபடி செய்யப்பட்டது. ஹலாலை நீதிமன்றம் தடைசெய்ய வில்லை. பாரத அரசு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது).

இறைச்சியைத் தாண்டி, அரிசி பருப்பு என சகலத்திலும் ‘இஸ்லாமில் அனுமதிக்கப்பட்ட’ (ஹலால் என்றால் வேறென்ன?!) பொருட்களைத் தான் நாமும் வாங்க வேண்டிய  நிர்பந்தம் ஏற்படுகிறது. கடைவீதியில் ஹலால் ஒரேயடி
யாக முக்கியத்துவம் பெற்றுவிட்ட பின் என்ன ஆகும்? ஒரு குறிப்பிட்ட மதப் பிரிவினர் மட்டுமே  சந்தையில் தர்பார் நடத்துவார்கள். அப்படியென்றால் அனைவருக்குமான பொருளாதார முன்னேற்றம் (‘ஸப் கே ஸாத்’) என்பதற்கு சாவு மணிதான். இது சிலருக்கான பொருளாதாரம் ஆகி விடுகிறது.

இப்படியாகத்தானே, நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல் ஹலால் என்பது வெறும் இறைச்சி விவகாரம் மட்டும் அல்ல! என்ன, ஜீரணிக்க முடியவில்லைதானே?