தனது மகளை ஈவ் டீசிங் செய்வதாகக் கூறப்படும் முஸ்லிம் இளைஞர்கள் குழுவிற்கு எதிராக போராட்டம் நடத்திய ஹிந்து மதத்தைச் சேர்ந்த அம்லாக் பீல் என்ற நபர், பாகிஸ்தானில் உள்ள சங்கர் மாவட்டத்தில் உள்ள ஷாதாத்பூரில் முஸ்லிம் இளைஞர்களால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார் என பாகிஸ்தான் அன்டோல்ட் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் குறிப்பாக சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்தும் பாகிஸ்தான் ஹிந்து அமைப்பான பாகிஸ்தான் தாராவர் இத்தேஹாத் (PDI) என்ற அமைப்பில், தனக்கு தெரிந்த ஒருவரின் உதவியுடன் தனது மகள் ரேஷ்மா பீலை ஈவ் டீசிங் செய்த அந்த இளைஞர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப் போவதாக பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் தந்தை தெரிவித்தார். இதையடுத்து அவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இது குறித்து காவல்துறை புகார் அளித்தும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. உயிரிழந்தவரின் மகளால் இளைஞர்களை அடையாளம் காட்ட முடியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் அன்டோல்ட் என்பது பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர் பிரச்சனைகள் குறித்த செய்திகளை வெளியிடும் ஒரு சமூக ஊடக செய்தி நிறுவனமாகும்.