’’ஹிந்தி யாருக்கு வேண்டாம்”?

தட்சிண் பாரத் ஹிந்தி பிரச்சார் சபா என்பது ஒரு கல்வி அமைப்பு. ஹிந்தி பேசாத தென்னிந்திய மக்களுடைய ஹிந்தி மொழிக் கல்வியறிவை மேம்படுத்துவதே, இதன் முக்கிய நோக்கம். சபா தலைமையகம் சென்னை, தி.நகர், தணிகாச்சலம் சாலையில் அமைந்துள்ளது. 1918 ல் சபாவை நிறுவியவர் மகாத்மா காந்தி.

பரிச்சய, ப்ராத்மிக், மத்யமா, ராஷ்ட்ர பாஷா, ப்ரவேசிகா, விசாரத் பூர்வ, விசாரத் உத்தர, ப்ரவீண் பூர்வ, ப்ரவீண் உத்தர என்று பல படிநிலைகளில் 1922 முதல் ஆண்டுக்கு இரு முறை வகுப்புகள் தொடங்கி நடத்தி, தேர்வும் நடத்தி மக்களுக்கு கல்வித் தொண்டு புரிந்து வருகிறது சபா.

சபாவின் ஹிந்தி வகுப்புகளுக்கு மக்களிடையே தொடர்ந்து ஆதரவு அதிகரித்து வருகிறது.

 தொடக்கநிலை பரிச்சய வகுப்பில் 2010ல் சேர்ந்தவர்கள் 15,367 பேர். பத்தாண்டுகளில் (2019ல்) இது 1,05,560 (ஒரு லட்சத்தைவிட அதிகம்) ஆனது.

    எல்லா வகுப்புகளிலுமாக 2010ல்  மொத்தம் 2,30,523 பேர் சேர்ந்தார்கள். 2019ல் சேர்ந்த
வர்கள் 46.07,902 (நாற்பத்தாறு லட்சத்தை விட அதிகம்).

தகவல் : முரளி சீதாராமன்