வேகமெடுக்கும் பாரதப் பொருளாதாரம்

டான் & பிராட் ஸ்டிரீட் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் காணொளி மூலம் கலந்துக் கொண்டு உரையாற்றிய மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், ‘கொரோனா தொற்றுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா 2வது அலை நமது பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. தடுப்பூசி திட்டம் விரைவுப்படுத்தப்பட்டு உள்ளது. அரசின் பல்வேறு சீர்திருத்த முயற்சிகள், தடுப்பூசி திட்டம் போன்றவை ஒருங்கிணைந்த பொருளாதாரத்தில் நல்ல பலனை கொடுக்கும். இதன் பலனாக, வரும் 2022 – 23 நிதியாண்டில், நமது நாட்டின் பொருளாதாரம் வேகமெடுக்கத் தொடங்கும். அது 6.5 முதல் 7 சதவீதம்வரை இருக்கும்’ என தெரிவித்தார்.