மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துதுள்ள காஷ்மீருக்கு அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதியான இல்ஹான் ஓமர் வருகை தந்ததை பாரதம் கடுமையாக கண்டிக்கிறது. இது பாரதத்தின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு எதிரானது. இல்ஹான் ஒமர் கடைப்பிடிக்கும் அரசியல், ஒரு குறுகிய மனம் கொண்ட பார்வையாகும்’ என்றார். மேலும், ஆப்கானிஸ்தானின் காபூலில் பள்ளியில் நடைபெற்ற தாக்குதல்கள் குறித்து பேசிய அவர், ‘பயங்கரவாத தாக்குதல்களை பாரதம் எப்போதும் கண்டிக்கிறது. ஆப்கானிஸ்தானில் நடக்கும் அனைத்து பயங்கரவாதத் தாக்குதல்களையும் நாங்கள் கண்டித்துள்ளோம், அந்த நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்’ என்று கூறினார்.