விமானப்படை வானத்தில் வீரசாகஸம்! ஆர்.எஸ்.எஸ். தமிழகமெங்கும் வீரநடை!

தமிழ் மண்ணில் தேசிய உணர்வு ஓங்க
ஆர்.எஸ்.எஸ்ஸின் அணிவகுப்பு ஊர்வலங்கள் அக்டோபர் அன்று மாநிலமெங்கும் நடை
பெற்றது. ஒரு செய்தி தொகுப்பு

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியன்று மாவட்டம் தோறும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி வருகிறது. கடந்த சில வருடங்களாக தமிழகத்தில்
ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்த ஊர்வலங்களுக்கு தமிழக காவல்துறை அற்ப காரணங்களைக் கூறி அனுமதி மறுத்து வரும் நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதன்மூலம் அனுமதி பெற்று அக்டோபர் 6 அன்று தனது ஊர்வலத்தை நடத்தியது. கடந்த ஆண்டு முந்தைய ஆண்டைக் காட்டிலும் அதிக கெடுபிடி காட்டிய தமிழக காவல்துறை, ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கேற்ப செயல்படுகின்ற நிலையை உறுதிபடுத்தியது. இதன் விளைவாக கடந்த ஆண்டும் உயர்நீதிமன்றத்தின் கதவுகளை தட்டிய ஆர்.எஸ்.எஸ் அந்த ஆண்டிற்கான அனுமதியை கேட்டுப்பெற்றது.

அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்
முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் வாதங்களை ஏற்க மறுத்தது. அணிவகுப்பு ஊர்வலம் அடிப்படை உரிமை. அதனை யாரும் தடுக்க முடியாது. ஒவ்வொரு ஆண்டும்
ஆர்.எஸ்.எஸ் தனது பேரணிக் காக உயர்நீதிமன்றத்தையும், உச்சநீதிமன்றத்தையும் அணுகிக் கொண்டிருக்க முடியாது. நாடு முழுவதும் பரவியுள்ள ஆர்.எஸ்.எஸ் தனது சித்தாந்த எதிரியான கம்யூனிஸ்டுகளால் கேரளத்திலும், திரிணமூல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கத்திலும் பயங்கரவாதி களால் அச்சுறுத்தல் உள்ள ஜம்மு காஷ்மீர், சத்தீஸ்கர் மாநிலங்களில் கூட எந்தவித அச்சுறுத்தல், கெடுபிடிகள் இன்றி நன்றாக நடக்கும்போது “அமைதி பூங்கா”வான தமிழகத்தில் ஏன் நடக்க முடியாது என்று கேள்வி எழுப்பியது. கடந்த பல வருடங்களாக தமிழகத்தில் ஊர்வலத்தை நடத்தி வந்த ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு தற்போது மட்டும் அனுமதி மறுப்பது ஏன் என்று தமிழக அரசை உச்சநீதிமன்றம் சாடியது. அதோடு காவல்துறை, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஒன்றாய் அமர்ந்து விதிமுறைகளையும், விருப்பங்களையும் தெரிவித்து கலந்து பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும். அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அனுமதி வழங்க வேண்டும் என்று தீர்பபு வழங்கியது.

இதையெல்லாம் அறிந்திருந்தும் இந்த ஆண்டும் தனது முட்டுக்கட்டை போட அற்ப காரணங்களைக் கூறி அனுமதி மறுத்தது தமிழக காவல்துறை. மேலும் கடந்த ஆண்டு 42 இடங்களில் நடத்திய நிலையில், இந்த ஆண்டு மேலும் கூடுதலாக 16 இடங்களில் நடத்த அனுமதி வேண்டுகிறது. ஒரே மாவட்டத்தில் இரண்டு இடங்களில் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரியது. அதனை அனுமதிக்க இயலாது என்றும், ஞாயிற்றுக் கிழமைகளில் நிகழ்ச்சி நடைபெறுவதால் “பள்ளி, கல்லூரி
களுக்குச் செல்லும் மாணவ மாணவியர்கள் பாதிக்கப்படுவார்கள்” என்று கேட்பவர்களே நகைக்கும் காரணங்களை தெரிவித்தது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை விதிமுறைக்கு மேல் விதிமுறை விதித்து ஒடுக்கியதில் விநாயகர் விஸ்வரூபம் எடுத்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தை இந்த ஆண்டும் அணுகிய ஆர்.எஸ்.எஸ் தனது பிரச்சினைகளை மீண்டும் எடுத்துரைத்தது. அதனடிப்படையில் நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமை
யிலான அமர்வு விசாரித்து காவல்துறையினரை கடுமையாகச் சாடியதுடன், ஏற்கெனவே இருந்த நிபந்தனையுடன் புதிய நிபந்தனைகள் ஏதுமின்றி நிகழ்ச்சியை நடத்துவதற்கு அக்டோபர் 1ம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் கேட்ட 58 இடங்களிலும் அனுமதி கொடுக்க வேண்டும். மறுக்கப் படும் 16 இடங்களிலும் பள்ளிகளிடம் நிகழ்ச்சி நடத்த அனுமதி பெற்றுத்தரும் பட்சத்தில் ஊர்வலம் நடத்த அனுமதிக்கலாம் என்று காவல்துறை தெரிவித்தது. இதனடிப்படை
யில், அக்டோபர் 6 ஞாயிற்றுக் கிழமையன்று தமிழகத்தில் உள்ள 56 இடங்களில் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் தொண்டர்கள் உணர்வுப்பூர்வமாக தங்களது இயக்கத்தின் நூற்றாண்டு விழா அணிவகுப்பு ஊர்வலத்தில் வாத்திய இசைக் கருவிகளுடன் கம்பீரமாக நடைபோட்டனர். எத்தனை இடர்கள் வரினும் அத்தனையும் தூள்தூளாக்கி ஹிந்து சமுதாய ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் இந்த பண்பை பொதுமக்களும் சங்க தரிசனம் செய்ய பெரும்திரளாக கூடி பாராட்டினர்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தில் தென்பாரத ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஸ்ரீவன்னியராஜன் பேசுகையில், நாடு சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் கழித்து வரும் 2047க்குள் அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெற்று, தற்சார்பு பெற்று உலகின் குருவாக பாரதம் விளங்கும். அதற்கு பாரத தேச மக்கள் அனைவரும் முயன்று சிறு பங்களிப்பை செய்தால் போதும் எனக் குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்தில் தென்பாரத ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ஸ்ரீராம் பேசுகையில், ஆர்.எஸ்.எஸ். கடந்த 99 ஆண்டுகளாக நல்ல பண்பு
களும், திறமையும் உள்ள மனிதர்களை உருவாக்கும் மிகச்சிறந்த பணியைச் செய்து வருகிறது. தற்போது சங்கம் நூற்றாண்டு விழாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த சமுதாயத்தையும் இணைத்துக் கொண்டு சங்கம் வேலை செய்ய விரும்பு
கிறது. இதனடிப்படையில் பஞ்சபரிவர்த்தன் என்ற தலைப்பில் 5 விஷயங்களை முன்னெடுத்துள்ளது. முதலாவது சமாஜிக் சமரஸதா என்பதாகும். அதாவது ஏற்ற
தாழ்வற்ற சமுதாயம் அமைத்தல் அடுத்து குடும்ப வாழ்க்கை முறை. ஹிந்து குடும்ப வாழ்க்கை முறை, பரியாவரண் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை, ‘ஸ்வ’ சுதேசிய வாழ்வியல் முறை. அடுத்து குடுமக்களின் அடிப்படை கடமைகள். இதற்கான திட்டங்களை வகுத்து சங்கம் செயலாற்றி வருகிறது. அவ்வாறு செய்தால் வரும் 2047ல் பாரதம் சுதந்திரம் பெற்ற நூற்றாண்டைக் கொண்டாடும் போது பாரதம் உலகத்தின் குருவாக மாறிவிடும் என்று பேசினார்.

நாமக்கல்லில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்தில் வடதமிழக தலைவர் டாக்டர் கே. குமாரசாமி பேசுகையில், தற்போதைய சூழ்நிலையில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் மத்தியில் நமது பாரத நாட்டின் கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது. நமது நாட்டில் சிலர் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசி வருகின்றனர். ஆனால் சங்கமானது ஒவ்வொரு தனிமனிதனின் கடமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது. சங்கத்தின் பார்வையில் ஹிந்து என்பது மதமல்ல. அது வாழ்க்கை முறை. இந்த நாட்டில் பிறந்து இது எனக்கு தேசம் என்று வாழும் அனைவரும் ஹிந்துக்கள் தான் என்று குறிப்பிட்டார்.

பெ.வெள்ளத்துரை