வித்யார்த்தி விக்ஞான் மந்தன்

விஞ்ஞான பாரதி (VIBHA) அமைப்பு, விக்யான் பிரசார் மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுடன் இணைந்து, தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை வளர்க்க ‘வித்யார்த்தி விக்ஞான் மந்தன்’ என்ற ஒரு போட்டித் தேர்வை ஏற்பாடு செய்தது. இத்தேர்வில் பங்குகொள்ள தமிழகத்தை சேர்ந்த மாணவ மாணவியர்கள் அதிக அளவில் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் 122 பள்ளிகளில் இருந்து 6,511 மாணவர்கள், தனி தேர்வர்களாக 2,657 மாணவர்கள் என மொத்தம் 9,168 மாணவர்களும் புதுவையில் இருந்து 1,039 மாணவர்களும் இந்த தேர்வை எழுதுகின்றனர். பாரதத்தின் மிகப்பெரிய ‘அறிவியல் திறமை தேடல்’ போட்டியான இதில், சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ மற்றும் மாநில கல்வி வாரியங்களின் கீழ் படிக்கும் 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர் பங்கேற்றுள்ளனர். தேர்வுகள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி, ஒடியா மற்றும் அசாமி உள்ளிட்ட மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.