வார்த்தையை மாற்ற கோரிக்கை

நாடாளுமன்றத்தில் தனி நபர் வரைவு மசோதாவை தாக்கல் செய்து பேசிய பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் அல்போன்ஸ், ‘அரசியலமைப்பின் முன்னுரையில் இடம்பெற்றுள்ள “சோஷலிஸ்ட்” என்ற வார்த்தை அரசியல் பொருளை கொண்டுள்ளது. இது பாரதத்தின் பெரும்பான்மை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆரம்பத்தில் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டபோது, முன்னுரையில் தேசம் ஒரு “இறையாண்மை கொண்ட ஜனநாயக குடியரசு” என்று விவரித்தது. ஆனால், 1970களில் 42வது சட்டத் திருத்தம் மூலம் அது அகற்றப்பட்டு அதற்கு பதிலாக “மதச்சார்பற்ற” மற்றும் “சோசலிஸ்ட்” என்ற சொற்கள் சேர்க்கப்பட்டன. எனவே, இந்த வார்த்தையை நீக்கிவிட்டு “சமமான” என்ற வார்த்தை இடம்பெற செய்யவேண்டும்’ என எடுத்துரைத்தார். இதற்கு ராஷ்டிரிய ஜனதாதள் எம்.பி மனோஜ் ஜாவும், ம.தி.மு.க.வின் வைகோவும் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.