உத்தரபிரதேசம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மாநகராட்சிக்கு சுமார் 14 கோடி வரி பாக்கி வைத்துள்ளது. பலமுறை இதை கட்ட சொல்லி அறிவுறுத்தியும் பணம் கட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து மாநகராட்சி அவர்களது வங்கி கணக்கை அதிரடியாக முடக்கியுள்ளது. இதைத்தவிர மின்சார பாக்கியாக ஒன்பது கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.