லியோனியும் பாடநூல் நிறுவன சர்ச்சையும்

தி.மு.க கொள்கை பரப்பு செயலாளரும் ஆபாச பேச்சுக்கு புகழ் பெற்றவருமான லியோனியை தமிழக பாடநுால் கழக தலைவராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு இந்து முன்னணி, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், பா.ம.க தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களும் பொதுமக்களும் கடும் கண்டனம்  தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு இந்த உத்தரவை திரும்பப் பெறவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், அனைத்து தி.மு.க தலைவர்களை போலவே, நல்ல நாள் பார்த்து பதவி ஏற்க நேற்று முன்தினம், அமாவாசையை தேர்ந்தெடுத்தார் லியோனி. அன்று காலை பதவியேற்பு நடக்கும் என அறிவிக்கப்பட்டு, பாடநுால் கழக அலுவலகத்தில், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால், பதவியேற்க லியோனி வரவில்லை. வராததற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை.