செப்டம்பர் 20 அன்று டில்லியில் பிடிபட்ட அல்குவைதா தீவிரவாதி, தான் ரோஹிங்கியாக்களுக்கு பயிற்சியளிக்க வந்ததாக வாக்குமூலம் தந்துள்ளான்.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல, சட்டவிரோதமாக குடியேறியவர்கள். எனவே, அவர்கள் மீண்டும் மியான்மர் நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுவார்கள்” என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த ரோஹிங்கியா முஸ்லிம்களால் நாட்டில் சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பில் பிரச்சினை ஏற்படும். ஏனெனில் அவர்களுக்கு அல்குவைதா, லஷ்கர்-இ-தொய்பா போன்ற சர்வதேச பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளது. எனவே அவர்களை வெளியேற்ற வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு” என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளது.
இந்த ரோஹிங்கியா அகதிகள் யார்?
பௌத்த நாடான மியான்மரின் ரைக்கேன் மாகாணத்தில் (அரக்கான் என்றும் அழைக்கப்படுகிறது) ரோஹிங்கியா முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள். இவர்களை சட்டவிரோத குடியேறிகள் என்று மியான்மர் அரசு 1982ல் அறிவித்தாலும், அவர்களை வெளியேற்ற பெரியளவில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ரோஹிங்கியாக்கள் 2012ல், அகீகுஅ எனும் தீவிரவாத அமைப்பை உருவாக்கி, ரைக்கேன் மாகாணத்தை பிரித்து முஸ்லிம் நாடு வேண்டும் என்று போராட ஆரம்பித்தனர். 32 ஆண்டுகள் அவர்களை போனால் போகட்டும் என்று விட்ட மியான்மர் அரசு, வன்முறையில் ஈடுபடும் ரோஹிங்கியாக்கள் மீது நடவடிக்கை எடுக்கவே, அவர்களும் நாட்டை விட்டு வெளியேறி, வங்கதேசம், மலேசியா மற்றும் இந்தோனேஷியா நோக்கி படையெடுத்தனர். முஸ்லிம் நாடுகளான மலேசியா, இந்தோனேஷியா அவர்களை ஏற்க மறுத்துவிட்ட நிலையில், இந்தியாவிற்குள் 2013ல் உள்ளே நுழைந்தனர். அப்போது இருந்த காங்கிரஸ் அரசு அசட்டையாக இருந்ததால் இவர்கள் பல மாநிலங்களில் ஊடுருவிவிட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு ஆதார் அட்டைகூட வழங்கியது காங்கிரஸ் அரசு.
கடந்த ஆகஸ்ட் மாதம் ரைக்கேன் மாகாணத்தின் ரோஹிங்கியாக்கள் 30 இடங்களில் தாக்குதல் நடத்தினார்கள். பொதுமக்கள், பௌத்த மடங்கள், ஹிந்து குடியிருப்புக்கள் மட்டுமல்ல, மியான்மர் ராணுவத்தின் மீதும் வெறித்தனமான தாக்குதல் நடத்தினார்கள். பொறுமை இழந்த மியான்மர் அரசு இவர்கள அனைவரையும் வெளியேற உத்தரவிட்டது.
வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உணவு, அத்தியாவசிய பொருட்களை அளிக்கிறோம், அடைக்கலம் தர முடியாது” என்று இந்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. “அப்பாவி ரோஹிங்கியா மக்களை மீண்டும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் வன்முறையாளர்களை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று மியான்மர் நாடு தற்போது அறிவித்துள்ளது. எனவே அப்பாவி ரோஹிங்கியாக்கள் அங்கே செல்ல எந்த பிரச்சினையும் இல்லை. அகதியாக அடைக்கலம் கொடுத்த மியான்மரை பிரிக்க முற்பட்ட இந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள், இருக்கும் எண்ணிக்கை கூடக் கூட இந்தியாவிலும் அதேபோல செய்யமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? தீவிரவாத குழுவுடன் தொடர்புடைய இவர்கள், நமது நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதில் சந்தேகம் இல்லை.
verry nice article