ரேஷன் குறித்த புகார்

தமிழகத்தில் செயல்படும் ரேஷன் கடைகளில் தொடர்ந்து பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன, பொருட்கள் தரமற்றதாக வழங்கப்படுகிறது, ரேஷன் கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை என்று புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. இணையவழியில் புகார்கள் தெரிவிப்பதில் சிரமம் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என தெரியவில்லை என்றும் கேட்கின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்க பதிவேடு வைத்து பராமரிக்க வேண்டும். அதை கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்று அரசு கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், தமிழகத்தில் அலைபேசி பயன்படுத்துபவர்கள் அதிகம் பேர் உள்ளனர். அவர்கள் புகார் தெரிவிக்க அலைபேசி செயலி, இணைய வசதி சீர்படுத்துதல், தொழில்நுட்ப மேம்பாடு போன்ற நவீன வழிமுறைகளை பின்பற்றாமல் மக்களை அரசு ஏன் பின்னோக்கி இழுக்கிறது என நெட்டிசன்கள் இது குறித்த விமர்சனத்தை முன் வைக்கின்றனர்.