கடந்த 2020, 21 ஆண்டிலிருந்து சுமார் ரூ. 1.83 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்கள் கொள்முதலுக்கு கொள்கை அளவில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. தேசத்தின் ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் விதிமுறைகளின்படி அவற்றின் கொள்முதலுக்கு கொள்கை அளவிலான ஒப்புதல் முதல்கட்ட நடவடிக்கையாகும். இதைத் தொடர்ந்து, ஒப்பதந்தங்கள் வெளியிடும் நடைமுறைகளை ராணுவம் மேற்கொள்ளும். மற்றொரு கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட், இந்திய கடற்படையில் கடந்த 1992ம் ஆண்டிலிருந்து அதிகாரிகளாக பெண்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். ராணுவ விவகாரங்கள் துறையின் கடந்த ஜூன் 23ம் தேதி அறிவிக்கையின்படி, கடற்படை மாலுமிகளாக நியமிக்கவும் பெண்கள் தகுதி பெற்றவர்களாவர் என்றார்.