ஸ்ரீ ராமாயண யாத்திரை ரயில் வரும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினத்தன்று டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படவுள்ளது. 10 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் உள்ள ஒவ்வொரு பெட்டியிலும் பாரதத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் உட்புற சுவரொட்டிகள் மற்றும் கலைப்படைப்புகளால் அலங்கரிக்கப்படும். ஒவ்வொரு பெட்டியும் ஒரு கருப்பொருளை கொண்டிருக்கும்.மேலும், இதில் வரும் பயணிகளுக்கு யோகா கற்பிக்க இரண்டு பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாரதம் மற்றும் நேபாளத்தில் உள்ள ஸ்ரீராமருடன் நெருங்கிய தொடர்புடைய இடங்களுக்கு யாத்ரீகர்களை அழைத்துச் செல்லும் இந்த முதல் “பாரத் கௌரவ்” ரயில், நாடு முழுவதும் எட்டு மாநிலங்கள் மற்றும் 12 நகரங்களுக்கு 18 நாட்கள் பயணிக்கும். ரயில் முழுவதும் 3 அடுக்கு ஏசி பெட்டிகளை கொண்டிருக்கும். இதில் பயணிக்க ஒரு டிக்கெட்டின் விலை 65,000 ரூபாய் என நிர்ணயைக்கப்பட்டுள்ளது.