ராம பக்தி சாம்ராஜ்யம்! மகான்களின் வாழ்வில்

நீங்கள் வணங்கும் பரமபிதாவைத்தான் (ஆண்டவரை) நானும் வேறொரு உருவில் வழிபடுகிறேன். அவரை வெறுமனே கடவுள் (God) என்றோ பரமபிதா என்றோ நான் பிரார்த்திப்பதில்லை. அந்தப் பெயர் என் உள்ளத்தை உருக்குவதில்லை. ஆனால் கடவுளை ராமர் என்ற பெயரிலும் உருவிலும் வழிபடும்போது நான் உள்ளம் ramanசிலிர்க்கிறேன். ‘ஸ்ரீ ராமர்’ என்ற நாமமே எனக்கு உத்வேகம் அளிக்கிறது. ராம நாமத்திலே தான் பக்தி ரசம் ததும்புகிறது. எனது முன்னோர்கள் இறைவனை ராமன் என்ற பெயரில் தான் அறிந்தனர். எழுச்சி பெற்றனர். நானும் அதே நாமத்தை உச்சரிக்கும்போது அதேபோன்ற ஊக்க சக்தியால் உந்தப்பட்டு ஏற்றம் பெறுகிறேன். பைபிளில் வரும் கடவுள் என்கிற பெயரை என்னால் ஏற்க முடியாது. அது என் ஆன்மிக அனுபவத்திற்கு முரணானது. அப்பெயர் என்னை வசீகரிக்கவில்லை. மெய்மையை உணர அது எனக்கு உதவாது. ஆகவே ‘ஸ்ரீ ராமர் கடவுள் அல்ல’ என்கிற எந்த போதனையையும் எனது ஜீவன் ஏற்க மறுக்கிறது.”

இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் காங்கிரசின் ஒரே பிரதிநிதியாக காந்திஜி 1931 இறுதியில் லண்டன் சென்றபோது, அம்மாநகரில் நடைபெற்ற பிரிட்டிஷ், அயர்லாந்து கிறிஸ்தவ மிஷனரிகளின் கூட்டு மாநாட்டில் உரையாற்றும்போது இவ்வாறு பேசினார். அந்த மாநாட்டில் நூற்றுக்கணக்கான பிஷப்புகள் கலந்துகொண்டபோதும் காந்திஜி எவ்வித தயக்கமுமின்றி தனது கருத்துக்களை பட்டவர்த்தனமாகத் தெரிவித்தார்.

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்

அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்