ராணுவ உத்திகள் மூலம் மீட்பு நடவடிக்கை

சூடானில் சிக்கித் தவித்த பாரத சமூகத்தினரை மீட்கும் ‘ஆபரேஷன் காவேரி’ நிறைவு பெற்றுள்ள சூழலில், சூடானில் இருந்து ஐ.ஏ.எப் சி 17 விமானம் மூலம் ராணுவ உத்திகளின் அடிப்படையில் ஏறத்தாழ 24 மணிநேரத்தில் செயல்படுத்தப்பட்ட மீட்பு நடவடிக்கை நமது ரணுவத்தின் திறனை மீண்டும் ஒருமுறை வெளிக்காட்டியுள்ளது. சூடானில் நமது விமானப்படை கடந்த சில நாட்களுக்கு முன் இரவுப் பார்வைக் கண்ணாடிகள், இன்ப்ரா ரெஸ் சென்சார்கள் உள்ளிட்டவற்றின் உதவியுடன் ஒரு அவசரக்கால மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த சூழலில், மற்றொரு சாகச மீட்பு நடவடிக்கையை நமது விமானப்படை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

கடந்த 3 மற்றும் 4 மே 2023 நள்ளிரவு நேரத்தில், பாரத விமானப்படையின் சி 17 குளோப்மாஸ்டர் விமானம், ஹிண்டனில் இருந்து வான்வழியாக இரவு முழுவதும் பறந்து சௌதி அரேபியாவின் ஜெட்டாவில் அதிகாலையில் தரையிறங்கியது. ஜெட்டாவிலிருந்து இடைநில்லா பயணத்தை  மேற்கொள்வதற்காக விமானம் அங்கே எரிபொருள் நிரப்பிக் கொண்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் வழியாக பரதம் திரும்பியது. சூடானில் எரிபொருள் கிடைக்காத நிலை மற்றும் எரிபொருள் நிரப்புவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க ஜெட்டாவிலிருந்து விமானம் அதிகப்படியான எரிபொருளை நிரப்பிக் கொண்டு சென்றது. இந்த பணியானது 192 பயணிகளை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டது. மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மற்றும் பாரதக் குடியுரிமை கொண்ட வெளிநாட்டினர் அல்லது பாரதத்தின் வெளிநாட்டு குடிமக்கள் (OCIS) ஆவர். இவர்களை ஜெட்டாவிற்கு அழைத்துச் செல்ல முடியவில்லை என்பதால், இந்த கனரக ஜெட் விமானம் மூலம் இடைநில்லா விமானத்தில் நேரடியாக பாரதத்துக்கு பறக்க வேண்டியிருந்தது.

சூடானில், மீட்புக் குழு கனரக ஜெட் விமானத்தை தரையிறக்க ஒரு தாக்குதல் அணுகுமுறையை மேற்கொண்டது. ஏதேனும் அவசரநிலை ஏற்படுமேயானால் விமானத் தளத்திலிருந்து விரைவாக வெளியேறுவதற்கு வாய்ப்பாக இருக்கும் என்பதால் தரையிறங்கிய பிறகும் விமானத்தின் என்ஜின்கள் இயங்கி கொண்டே இருக்கும்படி செய்யப்பட்டது. இதனிடையே, பயணிகளில் ஒருவர் சுயநினைவை இழந்தபோது ​​பணியாளர்கள் மற்றொரு திட்டமிடப்படாத அவசரநிலையை எதிர்கொண்டனர். இந்த சூழ்நிலையை உடனடியாகவும் திறமையாகவும் கையாண்ட மீட்புக் குழுவினர், அவருக்கு 100 சதவீத ஆக்சிஜனை கொடுத்து அவரது ஆரோக்கியத்தை உறுதி செய்தனர். இந்த விமானம், 04 மே 2023 அன்று இரவில் அகமதாபாத்தில் விமானம் தரையிறங்கியது. பின்னர் அதே நாளில் பின்னிரவு நேரத்தில் அங்கிருந்து ஹிண்டன் விமானத் தளத்திற்கு அழைத்து வந்தனர். இதற்காக மீட்புக் குழுவினர் ஏறத்தாழ 24 மணிநேரம் தொடர்ந்து பயணித்துப் பணியாற்றினர்.