சுதந்திர தினத்தின் 75ம் ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, ரயில்வே துறை சார்பில், திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 18 முதல் 35 வயது வரையிலான 50 ஆயிரம் இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கும் திட்டத்தை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் துவக்கி வைத்தார். எலக்ட்ரீஷியன், வெல்டர், பிட்டர், மெக்கானிக் என, நான்கு வகைகளில் பயிற்சி அளிக்கப்படும். நாடு முழுதும் உள்ள 75 ரயில்வே பயிற்சி மையங்களில் முதற்கட்டமாக 1,000 பேருக்கு இப்பயிற்சி அளிக்கப்படும். ரயில்வே மையங்கள் வாயிலாகவே மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இப்பயிற்சி பெற்றவர்கள் ரயில்வேயில் வேலை கோர உரிமை கிடையாது. பயிற்சி முடிவில் ரயில், போக்குவரத்து மையத்தின் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.