உலக அளவில் வெகுவாக அறியப்பட்ட யோகா குரு பி.கே.எஸ். ஐயங்கார். பாரதத்தின் பல பகுதிகளில் இருந்தும், உலக நாடுகளில் இருந்தும் பல்வேறு வயதினரும் அவரை நாடி வந்து யோகா மூலம் ஆரோக்கிய வாழ்வு பெற்றனர்.
யோகா குறித்த பி.கே.எஸ். ஐயங்காரின் சில அறிவுரைகள்:
* உடல் என்பது வில், ஆசனம் என்பது அம்பு, ஆன்மா என்பது இலக்கு.
* சுவாசம்தான் மனதின் மகாராஜா.
* உங்கள் முதுகெலும்பை நேராக வைத்திருக்க கவனம் செலுத்துங்கள். மூளையை விழிப்புடன் வைத்திருக்க முதுகெலும்பு சரியாக வேலை செய்யும்.
* உடல், மனம், உத்வேகத்தின் நல்லிணக்கம் தான் ஆரோக்கியம்.
* உடலின் சீரமைப்பு மூலம்தான் என் மனம், சுயம் மற்றும் அறிவின் சீரமைப்பை கண்டறிந்தேன்.
* யோகாசனங்கள் பயிற்சி செய்வதன் மூலமாக, நீங்கள் சீர்படுத்தும் கலையைக் கற்றுக்கொள்கிறீர்கள்.
* யோகாவின் மதிப்பை சொற்களால் சொல்ல முடியாது. அது அனுபவ ரீதியில் உணரத்தக்கது.
* யோகா என்பது ஓர் ஒளி. அதை ஏற்றிய பிறகு ஒருபோதும் மங்காது. நீங்கள் பயிற்சி செய்வதன் மூலம் இன்னும் ஒளிரச் செய்யலாம்.
* யோகா மூலமாக உங்கள் வாழ்க்கையின் ஒட்டுமொத்த உணர்வை மீண்டும் கண்டறியலாம்.
* நாம் விஷயங்களைப் பார்க்கும் பார்வையை மட்டும் யோகா மாற்றிவிடவில்லை; அது, பார்க்கும் நபர்கள் மீதும் தாக்கத்தை உண்டாக்குகிறது.
* இசையைப் போன்றதே யோகா. உடலின் ஒருமித்த இசை, மனதின் மெல்லிசை, ஆன்மாவின் நல்லிணக்கம் ஆகியவை வாழ்க்கையின் சிம்பொனியை உருவாக்குகின்றன.
* யோகா என்பது அமைதி, சாந்தம், மகிழ்ச்சிக் கதவைத் திறக்கும் தங்கச் சாவி.
* உங்கள் உடல் கடந்த காலத்தில் இருக்கிறது.
உங்கள் மனம் எதிர்காலத்தில் இருக்கிறது. யோகாவில் இவற்றை ஒருமித்து நிகழ்காலத்துக்கு கொண்டுவரலாம்.
யோகா மேதை பி. கே.எஸ் ஐயங்காரின் பிறந்த தினம் இன்று.