மொரீஷியசில் சத்ரபதி சிவாஜி சிலை

மஹாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், தனது மொரீஷியஸ் பயணத்தின் போது மராட்டிய மாவீரர் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சிலையை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், சத்ரபதி சிவாஜியை புகழ்ந்து, அவர் செய்த பணிகளைப் பட்டியலிட்டார். “சத்ரபதி சிவாஜி அன்று இருந்ததால் தான் நாங்கள் இன்று இருக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். போர் முறைகளில் மட்டுமல்ல, வரி முறை மற்றும் சட்டம் ஒழுங்கை அவர் நிர்வகித்த விதம் கூட விதிவிலக்கானது. அவரது சிலையை திறந்து வைக்கும் இந்த நிகழ்வு என் வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்று. எங்களது தாயகத்தில் இருந்து 5,000 கிலோமீட்டர் தொலைவில் சத்ரபதி சிவாஜியின் சிலை மொரீஷியஸ் பிரதமர் குமார் ஜக்நாத்தின் கைகளால் நிறுவப்பட்டுள்ளது” என்றார். பின்னர், மொரீஷியசில் பல்நோக்கு மண்டபம் கட்டுவதற்கு 44 மில்லியன் மொரீஷியஸ் ரூபாய் மானியம் மற்றும் 10 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதா அறிவித்த பட்னாவிஸ், மொரீஷியஸ் பாரத வர்த்தக சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் மொரிஷியஸ் நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்தார். இந்த சந்திப்பில் பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.