மத்திய ஜவுளி அமைச்சகம் ஏழு பி.எம் மித்ரா என்ற ஒருங்கிணைந்த மெகா ஜவுளி பூங்காக்களை நிறுவுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 21 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இதனை அமைக்க அசாம், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், தமிழகம், ஒடிசா, பஞ்சாப், ஆந்திர மாநிலங்கள் இதில் பங்கேற்க ஆர்வம் காட்டியுள்ளன. இதனை அமைக்க விருப்பம் உள்ள மாநிலங்கள் 1,000 ஏக்கர் பரப்பளவில் தொடர்ச்சியான மற்றும் தடையற்ற நிலப்பரப்புகளை தயாராக கொண்டிருக்க வேண்டும், பிற ஜவுளி நிறுவனங்களுடன் தொடர்புடைய சர்வதேசத் தரத்திலான உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் இருக்கும் மாநிலங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு, புதிய கிரீன் பீல்ட் பூங்காவிற்கு வளர்ச்சி மூலதன நிதியாக 30 சதவீதம் அல்லது ரூ. 500 கோடி அளிக்கும். ஏற்கனவே உள்ள பிரவுன் பீல்ட் தளங்கள் வளர்ச்சிக்காக திட்ட செலவில் 30 சதவீதம் அல்லது ரூ. 200 கோடி வழங்கும். இந்த முன்முயற்சியின் கீழ், நாடு முழுவதும் ஏழு ஜவுளிப் பூங்காக்களைக் கட்டுவதற்கு மத்திய அரசு 17,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது.