மீண்டும் திரும்புமா 1971 நடவடிக்கை

பாரதத்தின் தயவினால் சுதந்திரம் பெற்ற பங்களாதேஷ், வன்முறையின் மூலம் ஆட்சியை கவிழ்த்து விட்டு, நாட்டில் உள்ள சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல்களை நடத்துகிறது.  ஜமாத் இஸ்லாமிய பங்களாதேஷ் என்ற பயங்கரவாத அமைப்பினரின் வழிக்காட்டுதலில்  செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் பங்களாதேஷை ஆட்சி செய்யும் முகமது யூனுஸ். ஆட்சிக் கவிழ்ப்பு நடத்திய பின்னரும்,  ஹிந்துக்கள் மீதும், ஹிந்துக்களின் வழிப்பாட்டு தலங்கள் மீதும் தாக்குதல் நடத்துவது  மீண்டும் 1971-ல் நடந்தது போல் நடக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது.

பங்களாதேஷில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் என்பது ஏதோ, அந்த நாட்டு ஹிந்துக்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல, அதன் பின்னால் மேற்குவங்கத்தை பாரதத்தில் இருந்து பிரிக்கும் மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. பங்களாதேஷில் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பதவியேற்ற பிறகு, அல்கய்தா பயங்கரவாத அமைப்புடன் நெருக்கமான தொடர்புடைய அன்சருல்லா பங்களா டீம் (ஏபிடி) என்ற அமைப்பின் தலைவன் முப்தி ஜெய்ஷ்முதீன் ரஹ்மான் என்பவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டான்.

இவன், பங்களாதேஷில் இருந்து ஹிந்துக்களை துடைத் தெறியவும், மேற்குவங்கத்தை பாரதத்திடம் இருந்து விடுவிக்கவும் புனிதப் போர் (ஜிகாத்) தொடங்க நேரம் வந்துவிட்டது என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளான்.

பங்களாதேஷில் ஹிந்துக்களுக்கு எதிராக இவ்வளவு அநியாயங்கள் நடந்தும் ஒன்றிரண்டு தலைவர்களை தவிர பெரும்பாலான உலக நாடுகளும் தலைவர்களும், ஏன் பாரதத்தில் இருக்கும் அரசியல்வாதிகளும் இந்த விவகாரத்தில் கண்டும் காணாமல் வாய்மூடி மவுனம் காக்கின்றனர்.

ஹிலாரி கிளின்டன், ஒபாமா, ஜார்ஜ் சோரஸ் ஆதரவு பெற்ற, அவர்களிடம் இருந்து நிதியுதவி பெற்று அறக்கட்டளை நடத்திவந்த முகமது யூனுஸ், அமெரிக்க ‘டீப் ரூட்’ குழு எனப்படும் ஜார்ஜ் சோரஸ் கும்பலின் செயல்
திட்டத்தின்படி ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதலை வங்கதேசத்தில் அனுமதித்து, அதன் மூலம் மேற்குவங்கத்தில் ஹிந்து-–முஸ்லிம் மோதலை ஏற்படுத்தி பாரதத்தின் கிழக்கு மற்றும் வடகிழக்கில் வன்முறை, பதட்டத்தை ஏற்படுத்தும் சதியின் பின்னனி
தான், வங்கதேசத்தில் நடத்தப்படும் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

1971-ல் பாகிஸ்தானுக்கு எதிராக கிழக்கு பாகிஸ்தானியர்கள் நடத்திய போராட்டத்தின் போது, கிழக்கு பாகிஸ்தான் என்ன நிலையி
லிருந்ததோ, அதே நிலை தற்போது நீடிக்கிறது.  மேலும்  பங்களாதேஷ் நாட்டில் சிறுபான்மையினர்  நசுக்கப்படுகிறார்கள் என்பது உலகறிந்த விஷயமாகும். இந்நிலையே தொடர்ந்து நீடித்தால், 1971ல் பாரத அரசு எடுத்த கடும் நடவடிக்கையை போல் எடுக்க முன்வர வேண்டும் என்பதே பங்களாதேஷ் நாட்டின் ஹிந்துக்களின் எண்ணமாகும்.