மீட்டது மீனவர்களை மட்டுமல்ல…

இப்ப கடலில் தவிக்கக்கூடிய நம் சகோதரர்களை பத்திரமாக அழைத்துவர வேண்டும். பாதிரியார், ‘எங்க ஆளு சரியான நேரத்துக்கு சென்று மீனவர்களை காப்பாற்றி கூட்டிட்டு வந்தான். ஆனால் உங்க கடலோர காவல் படையினர் அதை செய்யவில்லை’ என்கிறார். காவல் படையினர் கடலில் சென்று ஒருவரை விட்டு விட்டு ஒருவரை அழைத்து வர முடியாது. இவனை எனக்கு பிடிக்கும் இவனை எனக்கு பிடிக்காது என்பது அல்ல. அங்கு இருக்கும் ஒவ்வொருவரும் பாரதிய மீனவர். அவரை காப்பாற்றியாக வேண்டும். ‘அதனால எங்க மீனவன், உங்க காவல் படை’ என்ற பேதம் வேண்டாம்;பிரிவு வேண்டாம். இந்த சமயத்துல யாரும்,யார் மேலயும் பழி போட வேண்டாம். எல்லாரையும் நான் கை கூப்பி கேட்கிறேன். புயல் தகவல் இன்னும் சீக்கிரம் வந்திருக்கணும் என்கிறார்கள். எல்லோரும் ஒரு விஷயத்தை நம் மனசுல ஏத்துக்கனும்; 100 வருடத்துல இல்லாத புயல் இப்போ வந்திருக்கு. பாரத அரசு கடலோர காவல் படையை உடனே அனுப்பியது. நவம்பர் 29 அன்று இங்க வந்துட்டாங்க. விஞ்ஞானிகள் எங்களுக்கு சொன்னாத்தான் நாங்க புயல் எச்சரிக்கை அனுப்ப முடியும். இன்னும் சீக்கிரம்னு சொன்னா எப்படி? அறிவியல் முன்னேறி ஒருமாதத்துக்கு முன்னாடியே சொல்கிற நிலை வரட்டும், அப்போ நல்லா தான் இருக்கும். இப்போ முடியாது. இந்த இழப்பிலிருந்து நாம நிறைய கத்துக்கணும். அத விட்டு நீ ஒன்றும் செய்யல, நான் செய்தேன் என்ற பேச்சே வேண்டாம். நாம எல்லோரும் கடலில் பாதுகாப்பா நம்ம தொழில் செய்வோம். கோபம் வேண்டாம். இப்போ நமக்கு அங்க இருக்க ஒவ்வொரு மீனவனும் வீட்டுக்கு வரணும் என்பது தான் முக்கியம். அதற்கான முயற்சியை நான் நிறுத்த மட்டேன்.”

(புயலால் பாதிக்கப்பட்ட கேரள, தமிழக மக்களிடையே பாரத பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது)

 

 

 

 

இது பொறுப்பானவர் (பாரத அரசின் பாதுகாப்பு அமைச்சர்) பேசிய பேச்சு. பொறுப்பற்றவர்கள், மக்களைத் தூண்டிவிட்டு குழித்துறையில் 10 மணி நேரம் ரயில் மறியல் செய்து, மீட்பு நிவாரணப் பணிகளில் குந்தகம் விளைவித்தார்கள். அந்த விவரம்கெட்ட கும்பலின் தலைவரை மத்திய அமைச்சரும் கன்யாகுமரி எம்.பியுமான பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்து மீனவர் மீட்புப் பணியின் விவரங்களை எடுத்துச் சொல்லிப் புரியவைத்ததுதான் பொறுப்புணர்வின் சிகரம். ஒரு நெருக்கடியில் தேசிய தலைமை திறம்பட வழிகாட்டியதையும் மாநில தலைமை திக்குமுக்காடியதையும்  ஒக்கி புயல் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.