மின்மாற்றிகள் பழுதடையாமல் தடுப்பதற்காக மின்வாரியம் உருவாக்கி உள்ள ‘பெல்லோ’ என்ற கருவிக்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கி உள்ளது.
மின் விநியோகத்தில் மின்மாற்றி மிகமுக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.இந்த மின்மாற்றியின் செயல் திறனைகுறைப்பதில், அதன் உள்ளே உருவாகும்ஈரப்பதம் முக்கிய காரணமாக உள்ளது. இதனால், பல இடங்களில் அவ்வப்போது மின்மாற்றிகள் பழுதடைந்து, மின்வாரியத்துக்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. மின்மாற்றியின் உள்ளே ஏற்படும் இந்த ஈரப்பதத்தை குறைப்பதற்காக மின்வாரியம் மேற்கொண்டு வரும் வழக்கமான நடைமுறைகள் அதிக செலவையும், சிக்கலையும் ஏற்படுத்தி வந்தன.
இந்நிலையில், மின்மாற்றியில் ஏற்படும் ஈரப்பதத்தை குறைக்கும் விதமாக, ஏற்கெனவே இருக்கும் சிலிக்கான் ஜெல்லுடன் இணைத்து சுருங்கி விரிவடையும் வகையிலான பெல்லோஎனும் புதிய தொழில் நுட்பத்தினாலான கருவியை தமிழ்நாடு மின்வாரியபொறியாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த பெல்லோ கருவியை பொருத்தியதன் மூலம் வெளிப்புற ஈரப்பதம் மற்றும் ஆக்சிஜனில் இருந்துமுழுமையாக மின்மாற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும், மின்மாற்றியின் பராமரிப்பு செலவு, நேரம் மற்றும் அவ்வப்போது பழுதடைவது தடுக்கப்படுகிறது. இந்நிலையில், மின்வாரியத்தால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பெல்லோ கருவிக்கு காப்புரிமை கேட்டு, இந்தியகாப்புரிமை அலுவலகத்தில் கடந்த 2015-ம்ஆண்டு மின்வாரியம் விண்ணப்பித்தது. இந்நிலையில், தற்போது இந்த பெல்லோகருவிக்கு 20 ஆண்டுகளுக்கு காப்புரிமையை இந்திய காப்புரிமை அலுவலகம் வழங்கி உள்ளது.
மின்வாரிய பொறியாளர்கள் உருவாக்கிய இந்த பெல்லோகருவிக்கு காப்புரிமை கிடைத்திருப்பது மின்வாரியத்துக்கு கிடைத்த வெற்றி என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.