மின்சார முறைகேட்டில் திமுக பிரமுகர்

கோவை சுகுணாபுரத்தை சேர்ந்தவர் தி.மு.க பகுதி கழக செயலாளராக உள்ளவர் மு. ராஜேந்திரன். உணவு பொருள் வினியோகஸ்தரான இவர், அந்த பொருட்களை இருப்பு வைக்க வாடகைக்கு குடோன் எடுத்து பயன்படுத்தி வருகிறார். இந்த குடோனுக்கு அவர் முறைகேடாக மின்சாரத்தை திருடி பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வந்தன. இதனை அடுத்து மின்வாரிய விஜிலென்ஸ் அதிகாரிகள் ராஜேந்திரனின் குடோனில் சோதனை நடத்தினர். சோதனையில் மின்சாரத் திருட்டு உறுதிபடுத்தப்பட்டது. முறைகேட்டில் ஈடுபட்ட ராஜேந்திரனுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர் அதிகாரிகள். ஆனால், ஆளும் கட்சியான தி.மு.கவின் பிரமுகர் என்ற அதிகார தோரணையில், அவ்வளவு தொகையெல்லாம் கட்டமுடியாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் ராஜேந்திரன். இதனால் 15 ஆயிரத்து 500 ரூபாயை மட்டுமே அபராதமாக விதித்துள்ளனர். ஆனாலும் அளும்கட்சி என்ற அதிகாரத்தை பயன்படுத்தி ரூ. 12 ஆயிரம் மட்டுமே அபராதமாக அவர் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக பிரமுகரின் இந்த அடாவடி போக்கு, கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.