அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி எனும் திட்டத்தை செயல்படுத்தி வரும் நம் மத்திய அரசு, வரும் டிசம்பர் மாதத்திற்குள் 94.4 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக தற்போது, 66 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க ஒரே நாளில் மிகப்பெரிய ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ளது. இதன்படி, கூடுதல் 37.5 கோடி டோஸ் கோவிஷீல்டுக்கும், 28.5 கோடி டோஸ் கோவாக்சினுக்கும் ஒப்பந்தத்தை போட்டுள்ளது, மேலும் 30 கோடி டோஸ் பயோலாஜிக்கல்-இ நிறுவனத்தின் ‘கோர்பேவாக்ஸ்’ தடுப்பூசியை வாங்க முன்பதிவு செய்து முன்கூட்டியே பணமும் செலுத்தியுள்ளது நம் மத்திய அரசு. இது, இதுவரை அரசால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய தடுப்பூசி கொள்முதல் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தவிர, ரஷ்யாவின் ஸ்புட்னிக் – வியை சீரம் நிறுவனம், அப்பல்லோ லெபாரட்டரீஸ் உள்ளிட்டவை பாரதத்திலேயே தயாரிக்கின்றன.