மாநிலத்தின் சொந்த இணையம்

கேரளாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் இணைய வசதி அளிக்க வேண்டுமென்பதற்காக கேரள அரசு, ‘கேரளா பைபர் ஆப்டிக் நெட்வொர்க் லிமிடெட்’ (KFON) என்ற தொலைதொடர்புத் துறையிடம் இருந்து இணைய சேவையை வழங்க உரிமம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘பாரதத்திலேயே கேரளாதான் முதன்முதலாக தனது சொந்த இணைய சேவையை கொண்ட மாநிலமாக திகழ்கிறது. KFON இதற்காக தொலைதொடர்பு துறையில் இருந்து இணைய சேவை வழங்கும் உரிமையை பெற்றுள்ளது. இதனால் KFON என்ற மதிப்பு மிகுந்த திட்டம் மக்களுக்கு இணையதள சேவையை மாநில உரிமையுடன் வழங்கும் சேவையாக செயல்படுகிறது. இந்த செயல்பாடுகளை இன்னும் வேகப்படுத்த முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.