கற்பனை, கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் தெய்வ புருஷர்கள், துர்க்கைத்தாய், திரௌபதி, நாரத மகரிஷி, யமதர்மராஜன் பெருமைமிக்க வரலாற்று நாயகர்கள் என்று எல்லோரையும் இழிவுபடுத்துவது இதுவல்ல முதல்முறை. வரலாற்று ஆசிரியர்கள் என்று பெயர் வைத்துக்கொண்டு பல்கலைக் கழகங்களில் அரசாங்க ஊதியம் பெற்று உயர்பதவியில் இருந்துகொண்டே ஹிந்து மக்களின் மத உணர்வை கொச்சைப்படுத்துவதை, தரக்குறைவாக விமர்சனம் செய்வதை, புண்படுத்துவதை கடந்த 70 ஆண்டுகளாக வாடிக்கையாக செய்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆசான் யார் தெரியுமா?
வேறு யார்? கம்யூனிஸ்ட்கள் தான்.
ராஜராஜசோழன், சத்ரபதி சிவாஜி, வீரபாண்டிய கட்டபொம்மன், சுதந்திர வீரர் சாவர்க்கர் என்று யாரைத்தான் விட்டு வைத்தார்கள்?
பகவான் ராமகிருஷ்ணருக்கும் சுவாமி விவேகானந்தருக்கும் நிலவிய குரு – சிஷ்ய உறவைப் பற்றி இந்த ‘உத்தம புருஷர்கள்’ எழுதிய ‘மேன்மையான’ பிரசுரங்களை எல்லாம் மறுபதிப்பிட்டால் இவர்கள் யோக்கியதை எல்லாம் புலப்படும்! நாற்றம் – நரகல்!
இப்போது புரிகிறதா, ‘மாதொரு பாகன்’ பெருமாள் முருகனுக்கும் சித்தூர் கற்புக்கரசி பத்மினியை இழிவுபடுத்தி ‘பத்மாவதி’ படம் எடுத்த சஞ்சய் லீலா பன்சாலிகளுக்கும் ‘இடதுகள்’ ஏன் வக்காலத்து வாங்குகிறார்கள் என்று!