சாரதா சிட் பண்ட் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் தாரா எனும் ஒரு தனியார் தொலைக்காட்சி ஊழியர்களின் சம்பளம் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டதை தெரிவித்திருந்தது. இந்த தொலைக்காட்சி சாரதா சிட் பண்ட் நிறுவனத்தின் தொலைகாட்சி என்பது குறிப்பிடத்தக்கது. மாதம் தோறும் 27 லட்ச ரூபாய் இதற்கென மமதாவால் ஒதுக்கப்பட்டது. 23 மாதங்களுக்கான சம்பளம் ரூ. 6.21 கோடி ரூபாய், இந்த வகையிலேயே வழங்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மமதாவின் வலது கையாக கருதப்படுபவர் சோவன் சேட்டர்ஜி. இவர் சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தார். முன்னதாக அக்கட்சியின், சுவேந்து அதிகாரி உட்பட பல பெரிய தலைவர்களும் தொண்டர்களும் பா.ஜ.கவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பக்கம் சட்டச் சிக்கல், மறு பக்கம் கரையும் கட்சி என தேர்தல் சமயத்தில் வரும் அடுத்தடுத்த அதிர்ச்சிகளால் மமதாவும் அவரது கட்சியினரும் குழப்பத்தில் உள்ளனர்.