மதுரை ‘எய்ம்ஸ்‘ பணி 5 ஆண்டுகளில் முடியும்!

பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக, 2.80 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர். இது தொடர்பாக மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு தேவை. கொரோனா காலத்தில், தமிழகத்தின் மருத்துவ உட்கட்டமைப்பு மற்றும் அவசர தேவைக்காக, 900 கோடி ரூபாய்; முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 574 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கியது. தமிழகத்தில், ஒரு நர்சிங் கல்லுாரி உட்பட, 11 புதிய மருத்துவ கல்லுாரி கட்ட மத்திய அரசு, 2,145 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, ஜப்பான் சர்வதேச நிதியம், நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளது. அதன் கட்டுமானம், கொரோனா தொற்றால் தாமதமானது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மத்திய அரசு முதலில், 1,264 கோடி ரூபாய் அறிவித்தது. தற்போது திருத்தம் செய்யப்பட்டு, 1,977 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இன்னும் ஐந்து ஆண்டுகளில், மருத்துவமனை கட்டுமான பணி நிறைவடையும் என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்தார்.