ஜான்ஸிராணி லக்ஷ்மிபாய் 1857 ல் நடந்த சுதந்திரப் பேரெழுச்சியில் களத்திலே போரிட்டுக் கொண்டிருந்தார்; களைப்பும் காயங்களுமாய் தண்ணீர் தாகத்தால் தவித்துக் கொண்டிருந்தார். வைத்திய அதிகாரியான இந்தியர் ஒருவர் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.
தாங்கள் யார்?” என்று வினவினார் ராணி லக்ஷ்மிபாய்.
நான் உயர்தர ஹிந்து. பிரிட்டிஷ் ராணுவத்தில் வைத்திய அதிகாரியாகப் பணியாற்றுகிறேன்” என்று அந்த அதிகாரி பெருமையாகச் சொன்னார்.
ஐயா! தாழ்ந்த ஜாதியினன் ஆயினும், தேச பக்தியுள்ளவன் கொண்டு வந்து கொடுத்திருந்தால் இந்தத் தண்ணீரை ஏற்றுக் கொண்டிருப்பேன். ‘உயர்ந்த’ ஜாதியினரான தாங்கள் விரோதியிடம் சேவை செய்து கொண்டிருக்கிறீர்கள். இந்தத் தண்ணீர் வேண்டவே வேண்டாம். உயிர் போவதே மேலானது” என்று ஆவேசமாகக் கூறினார் லக்ஷ்மிபாய்.
எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில் அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்