தமிழ்நாடு கடந்த 2 வாரமாக போராட்டக்காரர்களின் கையில் சிக்கியுள்ளது. ஏப்ரல் 1ந் தேதியிலிருந்து தினசரி போராட்டம். ஏதாவது ஒரு அமைப்பின் பேரில். ரயில் மீது ஏறி, விமானதளத்துக்குள் ஓடி, IPL போட்டிக்கு நடுவில் மைதானத்தில் வீரர்கள் மீது செருப்பு வீசி, ரயில் மீது ஏறிய பாமக தொண்டர் மின்சாரம் தாக்கி துவண்டது – இப்படி பல்வேறு வகைகளில் தமிழ்நாடே ரணகளம்!
இப்படித்தான் இப்போராட்டம் இருக்கவேண்டுமென ‘மீடியாக்கள்’ ஆசைப்பட்டு எடுத்துச் செல்கின்றன.
உண்மையில் தமிழ்நாடு ரணகளமா? அமைதிப்பூங்கா தமிழகத்தை மீண்டுமொரு ‘ஜல்லிக்கட்டு’ பூமியாக்க மீடியாவும் அதன் வட்டத்திலுள்ள சில ‘சில்லரை குழுக்களும்’ முயிற்சிப்பது மட்டுமே உண்மை.
IPL கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 10ந்தேதி மாலை மைதானத்துக்குள் 30,000 ரசிகர்கள் மற்றும் ISIS குரூப் கையில்தான் உள்ளது. தமிழ்நாட்டின் எதிர்கட்சிகள் குழு இரண்டு நாள் வெறும் ‘காவிரித்தாய் மீட்பு’ பாதயாத்திரையோடு முடித்துக்கொண்டது. இதில் விநோதம் என்னவென்றால் 1974ல் காவிரித்தாயை கர்நாடகத்தில் அடகு வைத்த கருணாநிதியின் மகன் தான் மீட்க போராட்டம் நடத்துகிறார்.
பத்திரிகை பேட்டி அறிக்கைகள், அறிவிப்புகள் வெளியிடுவதெல்லாம், சீமான், கௌதமன், பாரதிராஜா, சத்யராஜ், அமீர், உதயகுமார், வேல்முருகன் போன்றோர் தான்.
இவர்களுக்கெல்லாம் நோக்கம் ஒன்றுதான். மோடி அரசுக்கு இடைஞ்சல் கொடுப்பது ஒன்றுதான். ‘ஜெ’ இருந்தவரை இவர்கள் வால் ஆடவில்லை. இவர்களுக்கு நிதி உதவி தருபவர்களும் ஒரே இடம்தான். மோடி இந்த ‘நிதி பைப் லைனை’ ‘கட்‘ பண்ணிவிட்ட காரணத்தால் பசியிலும் கோபத்திலும் தள்ளாடுகிறார்கள்.
இதில் அமீர், உதயகுமார், சீமான் எல்லைதாண்டிய தேசபக்தர்கள். இவர்கள் சம்பளம் இல்லாமல் கடந்த 4 ஆண்டுகளாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். பேங்க் லாக்கரை பூட்டியதால் மோடி மீது கோபம். இவர்களது வெளிநாட்டு முதலாளிகளின் ‘பாச்சா’வும் மோடியிடம் எடுபடவில்லை. எனவே தான் ஆர்பாட்டம், போராட்டம் என்ற பெயரில் கூடிக் கும்மி அடிக்கிறார்கள். காவிரி பெயரில் கலகம் விளைவிக்க செய்கிறார்கள்.
ஸ்டர்லைட், நியூட்ரினோ பூதங்களால் தமிழ்நாடு முழுதும் பெரும் புயலை கிளப்ப முடியாது என்பதால் இன்னும் சில வாரங்களில் காவிரியில் தண்ணீர் ஓடும் என்பதாலும், இனி காவிரியை வைத்து அரசியல் செய்ய முடியாது என்பதாலும் உச்ச நீதிமன்றம் உத்தரவாதம் கொடுத்தபின்பும், சில்மிஷங்களை தொடர்கிறார்கள்.
வேடிக்கை என்னவென்றால், ‘காவிரியில் தண்ணீர் விடவில்லை, உங்களுக்கு IPL கிரிக்கெட் போன்ற கேளிக்கைகள் எதற்கு?’ என்பதுதான் அவர்கள் கோஷமாக இருந்தது. இந்த கேள்வியை ரிடையர்டு சினிமா டைரக்டர்கள் சீமான், அமீர், பாரதிராஜாவை வைத்துகொண்டு சொல்கிறார்கள்.
ஆனால் சினிமா படப்பிடிப்பு, வினியோகம், திரையிடல், தயாரிப்பு பணிகள், டப்பிங், பாடல்பதிவு என்ற எந்த வேலைகளையும் கேளிக்கையின் முதலிடமானவர்கள் நிறுத்துவார்களா? அதை இவர்கள் தடுக்கவில்லை.
வீட்டை குட்டிச்சுவராக்கும் அடுத்த கேளிக்கை ‘சீரியல்’, சன் மெகா தொடர்கள் தயாரிப்புகளையும் நிறுத்துவார்களா?
சினிமா தியேட்டரை மூடாமல், கேளிக்கைக்கு எதிராக போராடுகிறார்களாம். உண்மையில் IPL போட்டிகள் இந்தியாவின் டூரிசத்தை வளர்க்கிறது. பலவெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.
தமிழ்நாடு ஏற்கனவே சுற்றுலா பயணிகள் வருகையில் இந்தியாவில் இரண்டாமிடம் வகிக்கிறது. இம்மாதிரி கலாட்டாக்கள் அதை சீர்குலைக்கும். IPL போட்டிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணப்புழக்கம் இருக்கும். அதோடு, நிர்வாகம், பாதுகாப்பு, உபசரிப்பு என்ற பலதுறைகளில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கிறது.
இவ்வளவு விவரங்களும் தெரியாமல் அவர்கள் ஒன்றும் போராட்டம் நடத்தவில்லை. தங்கள் பண பைப் லைன்” கட் செய்யப்பட்டுவிட்டது. தனது வெளிநாட்டு எசமானர்களின் கட்டளைகளை நிறைவேற்ற முடியவில்லை என்பதே அவர்கள் கோபம்.
அதனால் தான் IPL போட்டியை பார்க்க இவர்கள் தாக்கினார்கள். மஞ்சள் பனியன் போட்டிருந்தவர்களை அநாகரீகமாக பேசி அடித்தார்கள். மஞ்சள் பனியன் போட்ட பெண்களை மனிதாபிமானமின்றி பனியன் கழற்றச் சொன்னார்கள். தரக்குறைவாக பேசினார்கள். திருவல்லிக்கேணியிலிருந்து வந்த முஸ்லிம் இளைஞர்கள் போலீசை தாக்கினார்கள். பெண்கள் பனியனை இழுத்தார்கள். இந்த அநாகரீகங்களோடு மைதானத்துக்குள் செருப்பு வீசி கோஷம் எழுப்பினார்கள்.
போலீசை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்ற ரஜினிகாந்துக்கு எதிராக இந்த ‘பட்டாளம்’ முழுதும் ஒன்றுசேர்ந்து பிரஸ்மீட் நடத்தி திட்டித் தீர்த்தது. கிரிக்கெட் வீரர்களை பாகிஸ்தான், சிரியாவில் பிடிப்பது போல் சிறைபிடிப்போம் என்றார். தமீமுன் அன்சாரி என்ற எம்.எல்.ஏ.
இப்படி அசிங்கம் செய்தவர்களின் நோக்கம் தான் காவிரி நீர் தண்ணீரா?
இவர்கள் காவிரி பெயரைச் சொல்லும் கலகக்காரர்கள், பெண்கள் இழிவுபடுத்திய வெளிநாட்டு விசுவாசிகள், போலீசை தாக்கிய பொறுக்கிகள்.
இவர்களது செயல்களால் IPL போட்டியின் மீதமுள்ள 6 போட்டிகளும் வெளி மாநிலத்துக்கு இடம் பெயர்ந்து விட்டது!
போலீசை தாக்கிய சீமானையும் டோல்கேட்டை அடித்து நொறுக்கிய வேல்முருகனையும் தலைமைக் செயலகம் சட்டசபையை தாக்குவேன் என்ற அமீரையும் மோடியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவேன் என மிரட்டிய வைகோவையும் தனிநாடு கேட்ட கௌதமனையும் ராணுவத்துக்கு சவால்விட்ட சத்யராஜையும் பிரிவினைவாதம் மூச்சாக அலையும் திருமுருக காந்தியையும் ஒரு 6 மாதம் களி திங்க வைத்தால், ‘எல்லாம் மூடிக்கொண்டு’ அமைதியாகி விடுவர்.
மோடி ஏன் இதை செய்யவில்லை என பலருக்கு ஆதங்கம். செய்தால் மாநில சுயாட்சி உடனே உயிர்பெறுமே! பலஹீனமான முதலமைச்சர் என நினைக்கும் எடப்பாடியின் செயல்பாடுகள் ஓரளவுக்கு சரியாகத்தான் இருக்கிறது.
மோடி கைவைக்க இவர்களென்ன ஒசாமா பில்லேடனா? வெறும் பிஸ்கோத்துகள். இவர்களுக்கு EPS போதும். இந்த கலகக் கும்பல், விரைவில் போய்ச்சேர வேண்டிய இடத்திற்கு போய்விடும்.