பொன்னம்மாளைப் போற்றிய பசும்பொன் மனம்! மகான்களின் வாழ்வில்

ஒருநாள் முத்துராமலிங்கத் தேவர் தனது உதவியாளரிடம் சிறிது பணம் கொடுத்து கதரில் காவி கலரில் இரண்டு புடவை வாங்கிவரச்  சொன்னார். தேவர் யாருக்காக புடவை வாங்கி வரச் சொன்னார் என்ற குழப்பமான சிந்தனையுடன் உதவியாளர் சென்று புடவையை வாங்கி வந்தார்.

மறுநாள் காலையில் தேவர் உதவியாளரையும் அழைத்துக்கொண்டு, அந்த சேலைகளை எடுத்துக்கொண்டு சென்னை மயிலாப்பூர் கச்சேரி ரோட்டில் உள்ள தனது உறவினர்  வீட்டுக்குச் சென்றார். அந்த வீட்டிற்குச் சென்றதும் உறவினரின் மனைவியிடம், அந்த அம்மாவை அழைத்து வா” என்றார். சரி என்று சொல்லி இந்திராணி அம்மையார் வெளியே சென்று எலும்பும் தோலுமாக காட்சி அளித்த ஒரு அம்மையாரை அழைத்து வந்தார்.muthuramalinga-devar

அந்த அம்மையார் கட்டியிருந்த புடவை கிழிந்து, ஒட்டுப் போடப்பட்டிருந்தது. அந்த அம்மையார் வீட்டிற்குள் வந்ததும், பசும்பொன் தேவர் எழுந்து அவர் காலில் விழுந்து வணங்கி, அந்தப் புடவைகளை அந்த அம்மையாரிடம் அளித்தார்.

எனக்கெதுக்குப்பா இதெல்லாம்?” என்றார் அந்த அம்மையார்.

அதற்கு ஒரு தாய்க்கு மகன் செய்யவேண்டிய கடமையம்மா!” என்றார் தேவர். காலமெல்லாம் நீ நல்லாயிருக்கணும் என்று தேவரை வாழ்த்திவிட்டு விடைபெற்றுச் சென்றார் அந்த அம்மையார்.

யார் அந்த அம்மையார் என்று கேட்டார் உதவியாளர். அவர்கள் தான் வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாள் என்றார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

வாஞ்சிநாதன் என்றதும் மணியாச்சி ரயில் நிலையம், கலெக்டர் ஆஷ் நினைவுக்கு வருகிறதே!

 

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்

அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்