திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த தேவிகாபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் கிறிஸ்தவ மெட்ரிக் மேல்நிலை பள்ளியில். சுமார் 5,000 மாணவ, மாணவிகள் படிக்கும் இந்த பள்ளியில் மாணவிகள் பொட்டு, பூ வைக்க கூடாது, கிறிஸ்தவ மத முறைகளை பின்பற்ற வேண்டும் என்பன உள்பட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், 8-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகள் பொட்டு வைத்து, தலையில் பூ வைத்து பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைப் பார்த்த பள்ளி நிர்வாகம் மாணவிகளின் பொட்டை அழித்து, தலையில் இருந்த பூவை எடுத்து வீசியது. அந்த இரு மாணவிகளையும் தண்டித்தால் மட்டுமே இது போன்ற சம்பவங்கள் இனி பள்ளியில் தொடராது என கிறிஸ்தவ பள்ளி நிர்வாகம் முடிவு செது, இருவரையும் ஆசிரியைகளை விட்டு பிரம்பால் அடிக்க செததுடன், பள்ளி வளாகத்தில் முட்டி போடவைத்து தண்டனை அளித்துள்ளது. நீண்ட நேரம் இரு மாணவிகளும் முட்டி போட்டுள்ளனர்.
மாணவிகள் தங்களது பெற்றோரிடம் சம்பவத்தை கூறவே, பெற்றோர்கள் நேற்று பள்ளி சென்று விளக்கம் கேட்டனர். எங்கள் மத கட்டுப்பாடுகளை மீறியதால் தண்டனை வழங்கியதாகவும், இஷ்டம் இருந்தால் பள்ளியில் படிப்பை தொடர வையுங்கள், இல்லையெனில் மாற்றல் சான்றிதழை பெற்றுச் சென்று வேறு பள்ளியில் உங்கள் மகள்களை சேர்த்து கொள்ளுங்கள் என்று நிர்வாகம் கூறிவிட்டது.
அதுமட்டுமல்ல! வகுப்பறைக்குள் அந்த மாணவிகளை அனுமதிக்காமல் பள்ளி நிர்வாகம், மாற்றல் சான்றிதழை பெற்று செல்லுமாறு கூறி பள்ளியை விட்டு மாணவிகளை வெறியேற்றியது. இதனால் மிகுந்த மனமுடைந்த, அந்த மாணவிகளின் பெற்றோர் தங்களது உறவினர்களுடன் நேற்று காலை திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் செததுடன் சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.