ஆர்க்கிட் மலர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். மலேசியாவில் காணப்படும் அழகிய மலர்கள் தான் ஆர்கிட் மலர்கள்.
தன் வாழ்க்கை முழுவதையுமே இந்த பூக்களுடன் வாழ்ந்து கழித்துவிடும் மாண்டிஸ் என்கிற பூச்சி, தான் பூச்சியா? பூவா? என்று கண்டுபிடிக்க முடியாத அந்த பூச்சி, ஆர்கிட் மலரை தன் பெயரோடு இணைத்துக் கொண்டு ‘ஆர்கிட் மாண்டிஸ்’ என்று அழைக்கப்படுகிறது.
பூக்களின் இதழ்கள் போலவே மாண்டிஸ் பூச்சிகளின் இறகுகள் மென்மையாகவே இருக்கின்றன. பெரிய ஆச்சரியம் என்னவென்றால், மாண்டிஸ் பூச்சிகள் பிறக்கும்போது கறுப்பு நிறத்தில் தான் பிறக்கின்றன.
சரி ஒரு பூச்சி ஏன் பூ மாதிரி வளர்கிறது? அதற்கு முன் இந்த பூச்சிகளைப் பற்றி கொஞ்சமாய் சில சுவாரசிய தகவல்கள்.
ஆர்கிட் மலர்களுடன் ஆர்கிட் மாண்டிஸ் பூச்சிகளையும் தெற்காசிய நாடுகளில் அழகுக்காக வீட்டில் வளர்க்கிறார்கள். சிலர் தங்கள் வீடுகளில் மாண்டிஸ் பூச்சிகளை மட்டும் தனியாக செல்லப் பூச்சிகளாள வளர்க்கிறார்கள்.
ஆர்கிட் பூ மாதிரியே இந்த பூச்சிகளும் மிமிக்ரி பண்ணும். இதழ் விரிப்பது, அசைவது எல்லாமே பூ மாதிரியே செய்யும் இந்த பூச்சி. ஆர்கிட் மலர் தோட்டத்திற்கு சென்று இந்த பூச்சியை நீங்கள் அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடித்து விட முடியாது.
சிறு சிறு பூச்சிகளை இவை உணவாக உட்கொள்ளும். மலேசிய மழைக்காடுகளில் அதிகமாக சுற்றித் திரிகின்றன. பூவுக்கு இருப்பது போலவே நான்கு கால்கள் இந்த பூச்சிக்கும் இருக்கின்றன.
ஏன் இந்த பூச்சி, பூ மாதிரி வாழ வேண்டும். இத்தனை வேஷமும் எதிரிகளிடம் இருந்து தப்பிப்பதற்காகத்தான். இப்பூச்சியை தாக்கி அழிக்க வரும் எதிரிகள், இப்பூச்சி இருக்கும் இடம் தெரியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி விடுகின்றன.
இந்த ஆர்கிட் மாண்டிஸ் பூச்சிக்கு அறிவியல் உலகம் சூட்டியிருக்கும் பெயர் என்ன தெரியுமா? பூச்சி உலகின் ரத்தினம்! சரியாகத் தானே சொல்லியிருக்கிறார்கள்.