பாரதத்தில் நடைபெற்ற பெரிய கிளர்ச்சிகள், மோதல்கள் அவற்றிற்கு தீர்வுக்கான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அணுகுமுறைகளை குறித்து ஆராயும் விதத்தில் ரத்தன் ஷர்தா மற்றும் யஷ்வந்த் பதக் ஆகியோர் இணைந்து “’கான்பிளிக்ட் ரெசுல்யூஷன் & தி ஆர்.எஸ்.எஸ் வே’ என்ற ஆங்கில புத்தகத்தை வெளியிட்டுள்ளனர். கருட பிரகாசன் பிரசுரம் வெளியிட்டுள்ள இந்த புத்தகம், தர்க்கரீதியாக மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி ஜம்மு காஷ்மீரை மையமாகக் கொண்டது, 2ம் பகுதி பஞ்சாப் குறித்தும் 3ம் பகுதி வடகிழக்கு மாநிலங்கள் குறித்தும் விவாதிக்கிறது. மேலும், இந்த பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்து, ஆர்.எஸ்.எஸ்ஸின் உயர்மட்ட கொள்கை உருவாக்கும் அமைப்புகள் எடுத்த தீர்மானங்களும், அதன் பகுப்பாய்வுகளும் இடம்பெற்றுள்ளன. மேலும், ஆர்.எஸ்.எஸ் என்றால் என்ன, அதன் ஹிந்து ராஷ்டிரா தத்துவம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வளர்ச்சி, துணை அமைப்புகள், மக்களின் பார்வை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இதில் பேசப்பட்டு உள்ளது.