திராவிடர், ஆரியர் என்னும் சொல் நம்மைப் பிரிக்கவும் அரசியல் செய்யவும் பயன்படும் வலிமை வாய்ந்த ஒரு சொல்லாக விளங்குகிறது. அதே சொல்லை இணைக்கும் சொல்லாக ‘ஆரியர் – திராவிடர் சங்கமம்’ எனும் தலைப்பில் 31 தலைப்புகளில் திராவிடர் யார், ஆரியர் வழியிலிருந்து என ஆராய்கிறது நூல். இனவியல், நிலவியல், மொழியியல் ஆகியவற்றின் அடிப்படையில் ஆராய்ந்துள்ளார்.
ஆரியர், திராவிடர் பாரதப் பழங்குடியினர் அனைவருமே ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களே என்பது பாரத மக்களின் மரபணுச் சோதனையிலிருந்து தெரிய வந்துள்ளது. எனவே, ஆரிய இனம், திராவிட இனம் என்ற இனப் பாகுபாடு அடிபட்டுப் போகிறது” என்பதை கருத்துகளின் சாரமாக அளித்துள்ளார்.
ஆய்வு நோக்கில் எழுதப்பட்டுள்ள இந் நூல் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளுக்கும் இடையே உள்ள பழமையான உறவு, ஒற்றுமை, வேற்றுமைகள், பண்டைய பாரதத்தின் நிலை என பல விஷயங்களையும் ஆய்வு நோக்கில் அணுகப்பட்டுள்ள நூல்.
நூல்: ஆரியர் திராவிடர் சங்கமம் (ஆய்வு நூல்)
படைப்பு: ஜி. கிருஷ்ணசாமி
வெளியீடு: புதுயுகம் பதிப்பகம், 4-27/10, கார்த்திக் நகர், முல்லை தெரு, தபால் தந்தி நகர், மதுரை – 625 017. அலைபேசி எண்: 9894855984
பக்கங்கள்: 305
விலை: ரூ. 275
– நரசிம்மன்