3 வது முறை பிரதமராகும் மோடிக்கு ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா ,மேற்காசியா , அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், ரஷ்யா, தென்கொரியா, இந்தோனேஷியா, இத்தாலி, நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், உள்ளிட்ட நாட்டு தலைவர்கள் மோடிக்கு தனிப்பட்ட வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோபைடன் வெளியிட்டுள்ள செய்தியில்: பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள். கோடிக்கணக்கான வாக்காளர்கள் ஓட்டளித்த வரலாற்று சாதனை படைத்த தேர்தல். அமெரி்க்கா, இந்தியா நாட்டு நட்புறவு மேலும் வளரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது போல் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு பூட்டான், வங்கதேசம், நேபாளம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.