அட்சய திருதியை வாழ்த்து: அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அட்சய திருதியை நல்வாழ்த்துகள். தானம் மற்றும் மங்களகரமான பணிகளைத் தொடங்கும் பாரம்பரியத்துடன் தொடர்புடைய இந்த புனித நாள், அனைவரது வாழ்விலும் வளம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தை அளித்திட வாழ்த்துகிறேன்”, என்று கூறியுள்ளார்.
ரமலான் பண்டிகை வாழ்த்து: ஈத் உல் பிதர் எனப்படும் ரமலான் பண்டிகையையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஈதுல் பித்ர் வாழ்த்துகள். நமது சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் கருணை உணர்வு மேலும் வளரட்டும். அனைவரின் அற்புதமான ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். ஈத் முபாரக்!” என தெரிவித்துள்ளார்.
பகவான் பரசுராமர் ஜெயந்தி: பகவான் பரசுராமர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது டுவிட்டர் பதிவில், “பகவான் பரசுராமர் ஜெயந்தியை முன்னிட்டு அனைவருக்கும் நல்வாழ்த்துகள். அவரது அருளால் அனைவரது வாழ்விலும் துணிச்சல், கற்றல் மற்றும் விவேகம் நிறைந்திட விழைகிறேன்” என தெரிவித்துள்ளார்.
புவி தினம்: நமது பூமியின் மேம்பாட்டிற்காக பணியாற்றுபவர்களின் யற்சிகளுக்கு, புவி தினத்தன்று பிரதமர்நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். இதுகுறித்த அவரது டுவிட்டர் பதிவில், “புவி தினத்தையொட்டி, நமது பூமியின் மேம்பாட்டிற்காக பணியாற்றும் அனைவரின் முயற்சிகளையும் பாராட்டுகிறேன். இயற்கையுடன் இயைந்த வாழ்வு என்ற நமது கலாச்சாரத்துடன் தொடர்புடைய நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதில் பாரதம் உறுதிபூண்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
பாராவ்னி குவஹாத்தி குழாய் திட்டம்: பிரதமரின் உர்ஜா கங்கா திட்டத்தின் கீழ் தேசிய எரிவாயு தொகுப்பில் பீகார் மாநிலத்தை இணைக்கும் பாராவ்னி குவஹாத்தி குழாய் திட்டத்தில் பீகார் பகுதியின் பணிகள் நிறைவடைந்திருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் டுவிட்டர் பதிவைப் பகிர்ந்துகொண்டுள்ள அவர், “பீகாரின் முன்னேற்றத்திற்கு இது பெரிதும் உதவும்” என தெரிவித்துள்ளார்.
தெஹ்ரி மக்களுக்கு பாராட்டு: உத்தராகண்ட் மாநிலத்தின் பல்வேறு அளவுகோல் வளர்ச்சிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்ததற்காக தெஹ்ரி மக்களின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் மாலா ராஜ்ய லக்ஷ்மி ஷாவின் டுவீட்டுக்கு பதிலளித்துள்ள மோடி, “இந்த பெருமைக்குரிய சாதனைக்காக தெஹ்ரியின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்! இது உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் வளர்ச்சிக்கான கடின உழைப்பின் விளைவாகும்” என பாராட்டியுள்ளார்.
சிம்லாவில் சானிட்டரி நாப்கின் ஆலை: நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் காஷ்யப்பின் டுவிட்டர் பதிவிற்கு பதில் அளித்துள்ள பிரதமர், “சிம்லாவின் சானிட்டரி நாப்கின் ஆலை, பெண்கள் வளர்ச்சியை நோக்கிய போற்றத்தக்க முன்முயற்சி ஆகும். அவர்களின் ஆரோக்கியத்துடன் வேலைவாய்ப்பிற்கும் இந்த முயற்சி வழிவகை செய்துள்ளது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என கூறியுள்ளார்.