பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டம்

2020 மார்ச் மாதத்தில் நாட்டில் கொரோனா பரவல் தொடங்கியதை அடுத்து, மத்திய அரசின் ‘பிரதமரின் ஏழைகள் நல தொகுப்பு’ அறிவிப்புக்கு இணங்க, ‘பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின்’ (PM-GKAY) கீழ் நாட்டில் உள்ள சுமார் 80 கோடி பயனாளிகளுக்கு கூடுதல் மற்றும் இலவச அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டன. ஒரு நபருக்கு மாதத்திற்கு 5 கிலோ என்ற அளவில் கூடுதல் உணவு தானியங்கள் விநியோகிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் 19.76 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளைத் தொடர்ந்து  உணவு தானியங்களைவிநியோகத்தை பொது விநியோகத் துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதில் தமிழகம் 70 முதல் 90 சதவீதம் மட்டுமே ஆதார் அடிப்படையிலான உணவு தானிய விநியோகத்தை செய்து பட்டியலில் பின்தங்கியுள்ளது.