பிரசாத கலப்பட அக்கிரமம்; ஹிந்துக்கள் கொதிப்பு

பிரசாத கலப்பட அக்கிரமம்; ஹிந்துக்கள் கொதிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் அசைவ கலப்படம் பற்றி கேள்விப்பட்டு உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்கள் மனம் புண்பட்டிருக்கிறது. பொதுவாக கோயில் பிரசாதங்களில் சுத்தம் காணாமல் போனதை சுட்டிக்காட்டி விஸ்வ ஹிந்து பரிஷத் கடந்த 10 ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தமிழகத்தில் இருக்கக்கூடிய கோயில்களிலும் பிரசாதத்தில் கலப்படம் இருப்பதை சொல்லி வந்தது. இதற்காக போராட்டங்களும் நடத்தியது. அதேபோல் சபரிமலையில் தயார் பண்ணக்கூடிய பிரசாதத்திலும் அங்கு அபிஷேகம் செய்யக்கூடிய நெய்யிலும் மாட்டுக் கொழுப்பு சேர்ந்து வந்திருப்பது கண்டறியப்பட்டதும் அதை எதிர்த்து போராட்டம் நடத்தியது.

ஹிந்து கோயில்களில் நடக்கக்கூடிய பூஜை சாமான்களில் கலப்படத்தை கலந்து கொடுப்பது ஒரு வாடிக்கையாக அமைந்து விட்டது. கடவுள் மேல் நம்பிக்கை இல்லை சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்லக்கூடிய திருமாவளவன் எல்லா இனிப்பிலும் மாட்டுக் கொழுப்பு இருக்கும். அது பற்றி பேச வேண்டியது இல்லை என்றார். ஆனால் பக்தர்களோட மனசு புண்படும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.

கடந்த 40 ஆண்டுகளாக விஷ்வ ஹிந்து பரிஷத், அரசே ஆலயத்தை விட்டுவெளியேறு, ஆலய நிர்வாகம் அது ஒரு வியாபார நோக்கோடு பண்ணக்கூடாது என்றது. குறிப்பாக தென்பாரதத்தில் இருக்கக்கூடிய கோயில்கள் முழுவதுமே வியாபார நோக்கத்தோடு நடக்கிறது. திருப்பதியை எடுத்துக் கொண்டால் அங்கு இருக்கக்
கூடிய ஊழியர்களில் 40 சதவீதம் பேர் ஹிந்து பெயரில் இருக்கக்கூடிய திருட்டு கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்கள்.

திருப்பதி திருமலைக்கு போகக்கூடிய டி.டி.டி.சி பஸ்ஸில் கூட மதர் தெரசா, இயேசு கிறிஸ்து, பைபிள் வசனங்கள் பிரிண்ட் பண்ணிக் கொடுக்கிறார்கள்.

ஹிந்து சமயத்தை அழிப்பதற்காக, ஹிந்து கோயில்களை அழிப்பதற்காக இருக்கக்கூடிய மறைமுக தாக்குதல் கிறிஸ்தவ, இஸ்லாமிய, நாஸ்திகவாதிகளாக இருக்கக்கூடிய அரசியல்
வாதிகளும் பண நோக்கத்தோடு இருக்கக்கூடிய வியாபாரிகளும் சேர்ந்து செய்யக்கூடிய விஷயம்தான் இது. ஆகவே விஷ்வ ஹிந்து பரிஷத் கோயில்களில் சுத்தமான பொருட்கள் கொடுக்காததை விஷ்வ ஹிந்து பரிஷத் கண்டிக்கிறது. தேவைப்பட்டால் இதற்காக நாடு முழுவதும் அரசை எதிர்த்து போராட்டம் நடத்த தயாராகிக் கொண்டிருக்கிறது.

 

விஸ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத இணை பொதுச்செயலாளர் அறிக்கையிலிருந்து