பாரதத்தில் மீண்டும் சிறுத்தைகள்

பாரதத்தில் 70 ஆண்டுகளுக்கு முன் முற்றிலும் அழிந்துபோன சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக நமீபியாவில் இருந்து சிறுத்தைகள் பாரதம் கொண்டு வரப்பட உள்ளன. இந்நிலையில் சமீபத்தில், ‘நமீபியாவில் இருந்து கொண்டுவரப்படும் சிறுத்தைகள் போக்குவரத்தில் சிக்கிக் கொண்டுள்ளன’ என செய்திகள் வெளியாகின. இந்த செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், “இது மத்திய அரசால் மேற்கொள்ளப்படும் ஒரு லட்சியத் திட்டமாகும். சிறுத்தைகளை மீண்டும் பாரதத்தில் அறிமுகப்படுத்துவதற்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் வழிகாட்டுதல்களின்படி சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்துதல், நோய் பரிசோதனை, தனிமைப்படுத்துதல், பத்திரமாக கொண்டு செல்வது, காட்டில் விடுதல் போன்ற செயல்முறைகளுக்கு கவனமாக திட்டமிடல் தேவைப்படுகிறது. அரசு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக தென்னாப்பிரிக்காவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பணி நடந்து வருகிறது” என அரசு தெரிவித்துள்ளது.