பாரதத்தின் நீளமான கடல் பாலம்

பாரதத்தின் மிக நீளமான கடல் பாலமான மும்பை துறைமுக இணைப்புப் பாலம் (மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங் – எம்.டி.ஹெச்.எல்) குறித்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது அடுத்த தலைமுறை நவீன உள்கட்டமைப்பு என்றும், இந்தப் பாலம் மக்களின் வாழ்க்கையை  எளிமைப்படுத்தும் பணிகளை அதிகரிக்கும் என்று அவர் கூறியுள்ளார். எம்.டி.ஹெச்.எல் பாலத்தின் சிறப்பு குறித்து மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிற்கு, பதிலளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், “அடுத்த தலைமுறை நவீன உள்கட்டமைப்பான இது மக்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்தும் நடவடிக்கையை அதிகரிக்கும்” என கூறியுள்ளார்.