ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் ஷாகுர் கான் என்ற முஸ்லிம் நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ஆசிட் வீசப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பட்டியல் சமூகப் பெண், கடந்த ஏப்ரல் 7 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில், உடலில் 50 சதவீதம் தீக்காயங்களுடன் முகம் சிதைந்த நிலையில் அவர் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து இறந்த பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இந்தக் கொடூரச் செயலைச் செய்துவிட்டுத் தப்பியோடி, தலைமறைவாக இருந்த குற்றவாளி ஷாகுர் கானை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அந்த பெண்ணின் கணவர் அளித்த புகாரில், தான் வெளியே வேலைக்கு வெளியே சென்றதாலும், குழந்தைகள் பள்ளிக்கு சென்றதலும் வீட்டில் தனது மனைவி தனியாக இருந்ததாகவும் அப்போது, ஷாகுர் கான் வீட்டிற்குள் புகுந்து தனது மனைவ்வியை பாலியல் பலாத்காரம் செய்தார். மனைவியின் அழுகையைக் கேட்டு, அவர்களது அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் அவருக்கு உதவ விரைந்தனர், இதனால் கோபமடைந்த ஷாகுர் கான், தனது மனைவி மீது அமிலம் போன்ற திரவத்தை ஊற்றி, தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார் என்றும் கூறியுள்ளார். இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதை ராஜஸ்தான் காவலர்கள் முதலில் மறுத்து விட்டனர், பிறகு தாமதப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இந்த விவகாரத்தில் காவல்துறை தலையிடாததைக் கண்டித்து பட்டியல் சமூகத்தினர் காவல் நிலையத்துக்கு வெளியே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்தே வழக்குப்பதிவு செய்து குற்றவாளி ஷாகூர் கானை கைது செய்தனர்.