பறை தரும் தென்பரை

ஆண்டாள் திருப்பாவையில், ‘பறை’ என்ற வார்த்தை பல முறை இடம்பெற்றுள்ளது.  இவ்வார்த்தை ஒரு இசைக் கருவியைக் குறிக்கும் வார்த்தையாக மட்டும் இருக்க முடியாதல்லவா?  இந்த வார்த்தைக்கு ‘பேறு’,  ‘கடாக்ஷம்’, ‘ஆசீர்வாதம்’ என்ற பொருள் கொள்ளலாம்.

அவதார புருஷரான கிருஷ்ணர், அர்ஜுனனுக்கும் மற்றோருக்கும் ‘பறை’ என்கிற பேற்றை வழங்கினார். இது நடந்தது வடக்கே.

தெற்கே, தென்பரையிலும் தன் பக்தர்களுக்கு ‘பறை’ கொடுத்து அருள்பாலித்துள்ளார். அர்ச்சா மூர்த்தியா நவநீத கிருஷ்ணர், காளிங்க நர்த்தன கிருஷ்ணர் வடிவில் வீற்றிருக்கிறார். இந்த கிருஷ்ணர் ஆலயம் பல நூற்றாண்டுகள் பழமையானது.

ஈச்சம்பாடி ஆச்சான் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ராமானுஜரால் சிம்மாசன அதிபதியா நியமிக்கப்பட்டார். இவர்கள் குடும்பம் இந்த கிராமத்தில் குடியேறி சுமார் பத்து தலைமுறை தாண்டிவிட்டது.

கிருஷ்ணர் கோயில்

தென்பரை அக்ரஹாரம் பாமினி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இரண்டு வரிசையாக அறுபது வீடுகள் மேற்கில் இருந்து கிழக்காக அமையபெற்றுள்ளன. கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இவ்வூ

ரில் வேத உச்சாடனம் காதிற்கு இனிமையாக ஒலித்தொக்கொண்டிருந்தது பிறகு, இது குறையத் தொடங்கியது. தற்போது புத்துயிர் உயிர் பெற்றுள்ளது. சுமார் நாற்பது ஆண்டுளாக உற்சவங்கள் இல்லாமல் இந்த கோயில் இருந்துவந்தது. இந்நிலையில், ஈச்சம்பாடியிலிருந்து தென்பரையில் குடியேறிய குடும்பத்து கிருஷ்ணமாச்சாரியாரின் முயற்சியால் 2001ல் கோயிலுக்கு சம்ரோக்ஷணம் நடைபெற்றது. அவரால் 2012ம் ஆ

ண்டில் தென்பரை ஸ்ரீவைஷ்ணவ சபா நிறுவப்பெற்றது. அதன் பிறகு தென்பரை, மீண்டும் பழைய மகிமையை அடைந்துள்ளது.

தென்பரை ஆண்டவன் என்று எல்லோராலும் அறியப்படும் ஸ்ரீமத் ரங்கநாத மகா தேசிக சுவாமிகளின் அவதார ஸ்தலம். ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் எட்டாம் தலைவரான தென்பரை ஆண்டவன் சுவாமிகள் விக்ரகத்துடன் இங்கு மணிமண்டபம் கட்டியுள்ளார். ஸ்ரீநிவாசர் சேவை சாதிக்கிறார். ஆண்டவன் ஸ்வாமிகளின் வழிதோன்றியோர் திருக்குடந்தை ஆண்டவன், ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன், உத்திராதி மடத்தின் இரண்டு தலைவர்கள் ஆகியோர் கோயிலை மங்களாசாசனம் செதுள்ளனர்.

ஸ்ரீனிவாசர், தென்பறை ஆண்டவன் மணி மண்டபம்

தற்போது தென்பரை ஆன்மீக சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஆவணி ரேவதி தென்பரை ஆண்டவன் திருநட்சத்திர தினத்தன்று ஆலயத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது. இங்கு பக்தர்களின் வேண்டுதலுக்கு கைமேல் பலன் கிடைக்கின்றது. வேண்டுதல் நிறைவேறியதும், சக்கரைப் பொங்கல் படைத்து வழிபடுகின்றனர். ஜோதிடர்கள் தென்பரை கிருஷ்ணரை வழிபட்டு வாழ்வில் மேன்மையடைய ஆலோசனை வழங்குகின்றனர்.

இத்திருத்தலம்  மன்னார்குடியிலிருந்து முத்துப்பேட்டைக்கு செல்லும் வழியில் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.