காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகேயுள்ள சாலவாக்கம் அருகேயுள்ள பாலேஸ்வரம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் முதியோர் காப்பகத்திற்கு சிலநாட்களுக்கு முன்பு ஒரு ஆம்புலன்ஸ் போன்ற வேன் செல்கையில் காய்கறிகளோடு ஒரு பிணமும் கூடவே இரு முதியவர்களும் கிடந்தனர். அதில் ஒரு மூதாட்டி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என சத்தம் போடவே அக்கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்ற இளைஞர் ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்தி என்னவென்று விசாரிக்கையில் மிகப்பெரிய மர்மம் வெளிச்சத்திற்கு வந்தது. இது குறித்து மாநில ஹிந்து முன்னணி செயலாளர் பரமேஸ்வரன் தலைமையில் காஞ்சி கோட்ட அமைப்பாளர் ரவீந்திரன், காஞ்சி மாவட்டத் தலைவர் ஆர்.டி.மணி உள்ளிட்ட 13 பேர் அடங்கிய குழுவொன்று பிரச்சினைக்குரிய முதியோர் காப்பகத்தை பார்வையிட்டு திரும்பினர். காஞ்சி கோட்ட அமைப்பாளர் ரவீந்திரன் நம்மிடையே பகிர்ந்துகொண்ட தகவல்:
Ž சுற்றியுள்ள கிராம மக்கள் பல முறை மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் கிராம நிர்வாகிக்கும் புகார் அளித்துள்ளார்கள். ஆனாலும் கூட புகார் அளித்தவர்களை மிரட்டிய காவல்துறை கண்காணிப்பாளர் மதிவாணன் குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளிவிடுவேன் என்று விரட்டியனுப்பியுள்ளார். இதனால் இந்த காப்பகத்தின் மீது சுற்றியுள்ள கிராம மக்கள் ஒருவித அச்சத்துடனேயே இருந்து வருகிறார்கள். காப்பகம் குறித்து கேட்கும் எந்தவொரு கேள்விக்கும் அவர்களால் சரியான பதிலைச் சொல்லமுடியவில்லை. இரவு நேரங்களில் முதியவர்களின் மரண ஓலம் கேட்கும். உள்ளே சில குண்டர்கள் வெளியே செல்லவேண்டும் என்று முரண்டு பிடிக்கும் முதியவர்களை அடித்து உதைப்பதால் எழும் அவலக் குரலே அது என்கின்றனர். மேலும் உள்ளே என்ன நடக்கிறது என்பது எதுவுமே கிராம மக்களுக்கு தெரியாது.
Ž உள்ளூர் அரசியல் பிரமுகர்களை பொருத்தவரையில் தைரியமுள்ள எவராவது சென்று பிரச்சினை செய்தால் அவர்களது தகுதிக்கு ஏற்ப 2,000 முதல் 2 லட்சம் வரை பணம் கொடுத்து மூடி மறைத்து விடுகிறார்கள். இதுவரை இக்கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் இதுபோன்று பணம் பெற்றுள்ளதாக கூறுகிறார்கள்.
Ž கிராம மக்களின் குடிநீர் ஆதாரம் இவர்களது 30 அடி பாதாள கல்லறையினால் பாதிக்கப்பட்டுள்ளது. குடிதண்ணீர் வெளியூரில் இருந்து எடுத்து வரவேண்டியிருக்கிறது என்று புகார் அளித்ததால் ஏன் ஒரு கிணற்றையே நம்பிக்கொண்டிருக்கிறீர்கள், வேறொரு கிணறு தோண்டி தண்ணீர் எடுக்கவேண்டியதுதானே என்று கிண்டலாக பதிலளித்தாராம் கிறிஸ்தவரான கிராம நிர்வாக அதிகாரி ஜான் கென்னடி.
Ž 2015 மழை வெள்ளத்தின்போது பாதாள கல்லறையில் இருந்து மனித உடலின் பாகங்கள் வெளியில் வெள்ளநீரோடு மிதந்து விவசாய நிலங்களில் கரை ஒதுங்கின. இதுகுறித்து புகார் அளித்தும் எந்தப் பயனும் இல்லை.
Ž அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள பல்வேறு முதியவர்களை சந்தித்தபோது அவர்கள் எவருமே வாய்திறந்து பேசத் தயாராக இல்லை. பாதிக்கும் மேற்பட்டோர், சுயநினைவின்றி ஆடையின்றி கட்டிலில் படுக்கவைக்கப்பட்டிருந்தார்கள்.
இறந்தவர்களை அடக்கம் செய்ய தயாரிக்கப்பட்டுள்ள அடுக்ககக் கல்லறைகளைப் பார்த்தபோது ஒவ்வொன்றும் பின்னோக்கி சாய்வாக அமைக்கப்பட்டிருந்தது. இறந்துபோன நபர்களின் சடலங்களை உள்ளே தள்ளி சிமெண்டால் மூடி வைத்திருந்தனர். ஒட்டுமொத்த பிணங்களின் கழிவுகளெல்லாம் சென்று விழுவதுபோன்று மிகப்பெரிய கிணறு போன்ற அறை அமைக்கப்பட்டிருந்தது. இரண்டு புறங்களிலும் கல்லறையும் மத்தியில் கிணறும் அமைவது போன்று வேறொரு கல்லறையும் கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுவட்டார மக்கள் எவருமே இங்கு வேலைக்காகவோ சேவைக்காகவோ அனுமதிக்கப்படுவதில்லை.
Ž தாம்பரம் இரும்புலியூர் சர்ச், சின்னமலை சர்ச், பரங்கிமலை சர்ச் போன்ற பகுதிகளில் இருந்து ஆதரவற்றோர் அழைத்துவரப்படுகிறார்கள். இந்த பிரச்சினை வெளிவர மூலக் காரணமான திருவள்ளூரைச் சேர்ந்த மூதாட்டி அன்னம்மாள், வீட்டில் சண்டையிட்டு வெளியேறியவர்தான். கிறிஸ்தவர்களுக்கு சொந்தமன வேறு பல காப்பகங்களில் இருந்தும் இங்கு முதியவர்கள் அழைத்துவரப்படுகிறார்கள். அனைத்து அரசு மருத்துவமனைகளில் இருந்தும் சில ஏஜெண்டுகள் மூலம் பணம் கொடுத்து கொண்டு வரப்படுகிறார்கள்.
Ž இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள சைதாப்பேட்டையைச் சார்ந்த நடராஜன் என்ற முதியவர் கூறுகையில், சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அங்குள்ள அட்டெண்டர் ஒருவர் சொல்லியதால் இங்கு வந்து சேர்ந்தேன். இருந்து குடும்பத்தினரிடம் தொடர்புகொள்ள முடியவில்லை. வீட்டிற்குச் செல்லலாம் என்றால் என்னால் நடக்கமுடியாது. அனுமதிக்கவும் மறுக்கிறார்கள். நான் இங்கு இருப்பதை எனது மனைவிக்குச் சொல்லி குடும்பத்தினர் என்னை அழைத்துச் செல்ல தகவல் சொல்லுங்கள்” எனக் கேட்டுக்கொண்டார். இந்த பிரச்சினையில் தலையிட்டு சிறைக்கு சென்றுவந்த மதிமுக பிரமுகர் கருணாகரன் கூறுகையில், முதலில் இந்த காப்பகத்து வேனை தடுத்தபோது ஒருவித அச்சம் இருந்தது. என் மீது புகார் அளித்து சிறைக்கு அனுப்பினார். சிறையிலிருந்து திரும்பி வந்தபின் ஊர் மக்களெல்லாம் என்மீது காட்டும் மரியாதையைப் பார்த்தபிறகு இந்தப் பிரச்சினையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் தைரியத்தோடு கடைசிவரை போராடும் மனோதிடத்தை கடவுள் எனக்கு அளிக்கட்டும்” எனக் குறிப்பிட்டார்.
Ž கணவனால் கைவிடப்பட்ட அல்லது விவாகரத்துப் பெற்ற பெண்களே இங்கு பணியில் உள்ளனர். ஒருசில சிறு குழந்தைகளும் இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தங்களது குழந்தைகளே என பொய் சொல்கிறார்கள். ஏனெனில் ஒருசில குழந்தைகள் தவிர பெரும்பாலான பெற்றோருக்கும் சம்மந்தமே இல்லாமல் உள்ளது. காப்பகத்தின் பொறுப்பாளராக அலெக்ஸ் என்பவர் உள்ளார். அவர் பாதிரியின் கட்டளைக்கு ஏற்ப செயல்படுகிறார். சென்ற ஆண்டில் மட்டும் 1,590 பிணங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என கூறினார். வேறு மாநில மக்களும் அங்குள்ளதாக தெரிவித்தார்.
Ž முழுக்க முழுக்க காப்பகத்திற்கு ஆதரவாகத்தான் அரசு அதிகாரிகள் செயல்படுகிறார்கள். அனுமதிக்கான எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை. 2011ல் அனுமதிக்கான விண்ணப்பத்தை மட்டுமே வைத்துள்ளார்கள். மேலும் வேலட் வடிவிலான புதைகுழிக்கும் அனுமதி பெறப்படவில்லை. அதிக அளவு முதியவர்களை பராமரிப்பதற்குக் கூட அனுமதி பெறவில்லை. இங்கு மருத்துவ வசதி கூட பெரிய அளவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Ž தொடக்கத்தில் இருந்தே காவல்துறை ஊர் பொதுமக்களுக்கு ஆதரவாக இல்லை. பிரச்சினை பெரிய அளவில் வெடித்து அரசு அதிகாரிகள் பலர் விசாரணைக்கு வந்தபின்பு எங்கே தங்களது பங்கு வெளியாகிவிடுமோ என்ற நிலையில் அரசு அதிகாரிகளும் காவல் துறையினரும் கடமைக்கு வேலைசெய்கிறார்கள். முதலில் ஹிந்து முன்னணிக் குழுவினரைக் கூட உள்ளே அனுமதிக்க மறுத்தவர்கள் பின்னர் பிரச்சினை பெரிதாகிவிடக்கூடாது என்பதற்காக எந்தவித தொந்தரவும் செய்யாமல் அமைதியாகப் பார்த்துவிட்டுத் திரும்பிவிடவும் என்ற நிபந்தனையின் பேரில் உள்ளே அனுமதித்தனர்.
maanilathil saaththan (Dhravida katchigal) aatchi seithal paikooda (pathiriyar) pinam thinnum
மாநிலத்தில் சாத்தான் (திராவிட கட்சிகள்) ஆட்சி செய்தால் பேய்கூட (பாதிரியார்) பிணம் தின்னும்.