பஞ்சாப்பில் பயங்கரவாத தாக்குதல் நடத்த இருந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டதாக அம்மாநில காவல்துறை டி.ஜி.பி. தெரிவித்துள்ளார். இதில் நான்கு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து பஞ்சாப் மாநில டி.ஜி.பி. கவுரவ் யாதவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, பஞ்சாப் மாநிலத்தில் முக்கிய இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி திட்டமிட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின்படி , சிறப்பு அதிரடிப்படை போலீசார் , நடத்திய தேடுதல் வேட்டையில் ராஜ்புரா என்ற இடத்தின் லிபர்டி செளவுக் பகுதியில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் நான்கு பேரும் கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜாரின் கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. இவர்கள் வாயிலாக பஞ்சாப்பில் பல்வேறு இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிக்கொடுத்தவன் இக்பால்ப்ரீத்சிங் என்ற புச்சி ஆவான். இவன் வெளிநாட்டில் இருந்து கொண்டு இச்சதிசெயலுக்கு மூளையாக இருந்துள்ளான். தக்க நேரத்தில் பஞ்சாப் போலீசாரின் துரித நடவடிக்கையால் பெரும் தாக்குதல் சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது என்றார். இவ்வாறு அவர் கூறினார்.