திருநெல்வேலி மருதுபாண்டியின் மகள் கார்த்திகாவுக்கு நவம்பர் 25 அன்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறப்பின் போதே குழந்தையின் தாய் அரை மயக்கத்தில் இருந்த போது அவரிடம் மருத்துவ சிகிச்சைக்கு என பல்வேறு தாள்களில் கையொப்பம் பெற்றுக்கொண்டு அவரிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் தற்காலிக கருத்தடை சாதனமான காப்பர் – டி யை பொருத்தி உள்ளனர்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் போது தான் காப்பார் – டி பொருத்தப்பட்ட விஷயத்தை அந்த ஏழை ஹிந்து பெண்மணியிடம் கூறியுள்ளனர். என்னை கேட்காமல் எதற்காக கருத்தடை சாதனம் பொருத்தினீர்கள் என கேட்டதற்கு அதை எப்போது வேண்டுமானாலும் அகற்றி விடலாம் ஹிந்து பெண்களுக்கு பொருத்த சொல்லி உத்தரவு உள்ளதாக அந்த பெண்ணிடம் கூறியதாக அந்த பெண்ணே புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் தற்காலிக கருத்தடை சாதனம் பொருத்தப்பட்ட பெண்ணுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு மீண்டும் அரசு மருத்துவமனைக்கு சென்றபோது மருத்துவர்கள் சரியாக பொருத்தப்படவில்லை என அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கார்த்திகாவின் தந்தையும் இந்து முன்னணி நிர்வாகிகளும் நீதி கேட்டு காவல்துறையில் புகார் மனு அளித்தனர். ஆனால் போலீசார் இந்து முன்னணி மாநில செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன் மற்றும் பெண்ணின் தந்தை மருதுபாண்டியன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து குற்றாலநாதனை கைது செய்து திருநெல்வேலி குற்றவியல் நீதித்துறை நீதிபதி சத்யா முன்பாக ஆஜர்படுத்தினர்.
அப்போது காவல்துறையினரிடம் நீதிபதி தவறை சுட்டிக்காட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்வதில் இவ்வளவு அவசரம் காட்டும் காவல்துறை தவறு செய்தவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பி இந்து முன்னணி மாநில செயலாளரை சொந்த ஜாமினில் விடுதலை செய்தார்.
இதுகுறித்து குற்றாலநாதன் தெரிவிக்கையில் ஒரு ஹிந்து பெண்ணுக்கு கட்டாய கருத்தடை சாதனம் பொருத்தப்பட்ட விஷயம் வெளிவந்துள்ளது. தமிழக முழுவதும் இதுபோல் எத்தனை சம்பவங்கள் நடந்துள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.