சென்னை கோயம்பேட்டில் நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் நேற்று வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டின் வளர்ச்சி மற்றும் 2047-ல் நாடு வல்லரசாக வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு அனைவரும் வாக்களிக்க வேண்டும். தேசத்தின் வளர்ச்சிக்காக, ஊழல் இல்லாத ஆட்சி அமைவதற்காக பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். நீலகிரி தொகுதியில் பாஜகவின் வெற்றி 100 சதவீதம் உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.