நீங்கள் ஒரு பள்ளி, கல்லூரியில் ஆசிரியராக இருக்கலாம். அல்லது முதல்வராக இருக்கலாம். உங்களுக்கு ஒரு கடமை உள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை செயல்ப்படுத்துவதில் ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஜந்தாம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி, 6ம் வகுப்பு முதல் தொழில் கல்வி, மும்மொழிக் கல்வி என பல புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மத்திய அரசு எந்த ஒரு நல்ல திட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதை எதிர்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் உள்ளது. புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதில் அசிரியர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. உங்கள் ஆலோசனைகளை கல்வித்துறை வேண்டுகிறது. பள்ளிக் கல்வியில் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக கேள்விப் பதில் முறையில் படிவங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. நீங்கள் தெரிவிக்கிற பயனுள்ள பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும். நேற்று முதல் துவங்கி விட்டது. கடைசிநாள் இம்மாதம் 31-ம் தேதி. உங்கள் ஆசிரிய நண்பர்களுக்கு இந்தச் செய்தியை பகிர வேண்டுகிறோம்.
தாங்கள் பரிந்துரைக்கப்பட வேண்டிய இணையதள முகவரி: NEP 2020