குஜராத்தின் வதோதராவில் 30 மார்ச் 2023 அன்று நடைபெற்ற ஸ்ரீராம நவமி ஊர்வலங்கள், உள்ளூர் முஸ்ளிம்களால் தாக்கப்பட்டன. ஒரே நாளில் ராமரின் இரண்டு ஷோபா யாத்திரை ஊர்வலங்கள் வன்முறையாளர்களால் கற்களால் தாக்கப்பட்டன. மாநில ரிசர்வ் காவல் படை (எஸ்.ஆர்.பி.எப்) நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது, அவர்களது துப்பாக்கிகளை வன்முறை கும்பல் பறிக்க முயன்றது அங்கு எடுக்கப்பட்ட வீடியோக்கள் மூலம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து ஏப்ரல் 1ம் தேதி எஸ்.ஆர்.பி.எப் காவலர் ஹிம்மத்சிங் பரியா புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய குஜராத் காவல்துறை, இந்த விவகாரம் தொடர்பாக அப்துல் ரஷித் சத்தார் ஷேக் என்ற நபரை கைது செய்தது. சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வாராசியா காவல்துறை ஆய்வாளர் அசோக் மோரி கூறுகையில், மார்ச் 30 அன்று மாலை 5:45 மணியளவில், காவலர்கள் கும்பர்வாடாவுக்கு அருகில் பாதுகாப்புப் பணியில் இருந்தபோது, பதேபுராவில் வசிக்கும் அப்துல் ரஷித் சத்தார் ஷேக், பிட்டு ரபீக் பெங்காலி மற்றும் மொஹ்சீன் ஆகிய மூன்று பேர், அந்தப் பகுதியில், காவலர்களின் கடமையைச் செய்யவிடாமல் தடுக்க முயன்றதுடன், கைகலப்பில் ஈடுபட்டு அரசு வழங்கிய துப்பாக்கியை பறிக்க முயன்றனர். சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு முன், குற்றவாளிகள் எஸ்.ஆர்.பி.எப் வீரர்களை தாக்கினர். அவர்கள் மீது தற்போது வழக்குகள் பதியப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.